Major Investments By South Korean Companies - Platform Tamil

Major Investments By South Korean Companies : தென் கொரியாவின் முக்கிய நிறுவனங்களின் மேம்பட்ட முதலீடுகள்

கர்நாடகாவில் 150 மில்லியன் டாலர்களுக்கு மேம்பட்ட முதலீடுகள் செய்ய தென் கொரியாவின் முக்கிய நிறுவனங்கள் (Major Investments By South Korean Companies) ஈடுபட்டுள்ளன. பல தென் கொரிய நிறுவனங்கள் கர்நாடகாவில் Gaming, Auto மற்றும் FMCG துறைகளில் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. கர்நாடகா தூதுக்குழு தென் கொரியாவை முதலீடுகளுக்காக ஈர்த்து கர்நாடக மாநிலத்தின் பொருளாதார நிலப்பரப்பை Gaming, Auto மற்றும் FMCG துறைகளில் வலுப்படுத்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது. தென் கொரியாவின் முக்கிய நிறுவனங்களான YG-1, Krafton Inc, Go Pizza மற்றும் HY ஆட்டோமோட்டிவ் கன்ட்ரோல்ஸ் ஆகிய நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுடன் Minister MB Patil (Karnataka Govt Minister Of Large And Medium Enterprises And Infrastructure Development) கலந்துரையாடினார்.

Major Investments By South Korean Companies - கர்நாடகா தூதுக்குழு தென் கொரியாவை முதலீடுகளுக்காக ஈர்க்கிறது

Krafton Inc :

Krafton Inc ஆனது வீடியோ கேம் வெளியீட்டில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். இந்த Krafton Inc நிறுவனம் ஆனது கர்நாடகாவில் ஒரு செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்/கேமிங் ஸ்டுடியோவை திறக்கவும் மற்றும் இந்தியாவில் இருந்து அதிகமான பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. Krafton Inc ஆனது 2021 முதல் 140 மில்லியன் டாலர்களை இந்திய ஸ்டார்ட்அப்களில் குறிப்பாக ஸ்போர்ட்ஸ், மல்டிமீடியா பொழுதுபோக்கு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஆடியோ தளங்களில் முதலீடு செய்துள்ளது. விவாதங்களில் கேமிங்கில் AI ஒருங்கிணைப்பு, IP உரிமைகள் மற்றும் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சி ஆகியவை அடங்கும். Minister பாட்டீல் Krafton Inc இன் மூத்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

YG-1 :

தென் கொரியாவை தளமாகக் கொண்ட YG-1 ஆனது மேம்பட்ட வெட்டுக் கருவிகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம் ஆகும் (துல்லியமான கருவிகளில் உலகளாவிய நிறுவனம்). இந்த YG-1 நிறுவனம் ஆனது ஏற்கனவே கர்நாடகாவில் உள்ள துமகுரு மெஷின் டூல் பார்க் (TMTP) இல் ஒரு உற்பத்தி வசதியை இயக்குகிறது. “ஒய்ஜி-1 ஒரு அதிநவீன ஆர் & டி மையத்தை உருவாக்கவும் முன்மொழிந்துள்ளது. ஒய்ஜி-1ன் லட்சியத் திட்டங்களை ஆதரிப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது” என்று பாட்டீல் கூறினார். “YG-1 கர்நாடகாவில் ஒரு அதிநவீன கொரிய மொழி பயிற்சி மையம் (கற்றல் மையம்) நிறுவ முடிவு செய்துள்ளது. YG-1, 150 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக அறிவித்தது”.

Go Pizza :

கர்நாடகாவின் FMCG சுற்றுச்சூழல் குறித்து Minister பாட்டீல் Go Pizza-வின் தலைமை நிர்வாக அதிகாரி லிம் ஜே-வோனுடன் விவாதித்தார். Minister பாட்டீல், “Go Pizza-வின் 60 நாடு தழுவிய இடங்களில், 40 ஆனது பெங்களூரில் உள்ளன (அனைத்தும் நேரடியாகச் சொந்தமானது). கொரியாவுக்குப் பிறகு இந்தியா ஆனது Go Pizza-வின் இரண்டாவது பெரிய சந்தையாக மாறியுள்ளது. இந்த நல்ல வளர்ச்சியைத்  மேலும் தூண்டும் வகையில், பெங்களூருக்கு அருகில் தற்போதுள்ள Go Pizza-வின் தொழிற்சாலையை மும்மடங்காக்க Go Pizza முடிவு செய்துள்ளது. இந்தியாவில் டோமினோவின் வெற்றியைப் பிரதிபலிக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ரூ.150 கோடிக்கும் அதிகமான விற்பனையை இலக்காகக் கொண்டிருப்பதாக Go Pizza நிறுவனம் தெரிவித்துள்ளது” என்று கூறினார்.

HYAC :

Minister பாட்டீலுடன் HY ஆட்டோமோட்டிவ் கன்ட்ரோல்ஸ் (HYAC) ஆனது அவர்களின் இந்திய விரிவாக்கத் திட்டங்களைப் பற்றி விவாதித்தது. இந்தியாவில் இணைக்கும் திட்டம் மற்றும் HYAC-ன் வசதிக்காக பெங்களூரு அருகே சுமார் 3 ஏக்கர் நிலத்தைத் தேடுகிறது. சீனாவில் உள்ள HYAC-ன் தற்போதைய உற்பத்தித் தளத்திற்கு மாற்றாக இந்தியாவை ஒரு மூலோபாய ஏற்றுமதி மையமாக நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Hyandai மற்றும் Kia-வின் முக்கிய வாடிக்கையாளர் தேவைகளால் இந்தியாவிற்கு விரிவாக்கம் செய்வதற்காக HYAC முடிவு செய்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply