New Car Launch In May 2024 : மாருதி முதல் டாடா வரை இந்த மாதம் வெளியாகும் கார்கள்
ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கார்கள் (New Car Launch In May 2024) அறிமுகப்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த மே மாதம் என்ன புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கார்கள் வரவுள்ளன? என்பதை தற்போது காணலாம்.
New Car Launch In May 2024 :
* மாருதி சுசூகி ஸ்விப்ட் : தற்போது விற்பனையில் உள்ள ஸ்விப்ட் மாடலுக்குப் பதிலாக, மேம்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை ஸ்விப்டை அடுத்த மாதம் மாருதி சுசூகி அறிமுகப்படுத்த உள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி மே 9ம் தேதி புதிய ஸ்விப்ட் விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது. புதியதாக மேம்படுத்தப்பட்ட ஸ்விப்ட் முற்றிலும் மாற்றி வடிவமைப்பு செய்யப்பட்ட வெளிப்புறம் மற்றும் உட்புறம், புதிய Z சீரிஸ் இன்ஜினுடன், மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் புதிய அப்டேட் செய்யப்பட்ட ஸ்விப்ட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைன் மற்றும் இன்ஜின் மாற்றங்கள் தவிர, இந்த புதிய ஸ்விப்டில் பல புதிய அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
* டாடா அல்ட்ராஸ் ரேசர் எடிஷன் : தற்போதுள்ள டாடா அல்ட்ராஸ் மாடலின் ரேசர் எடிஷனை டாடா மோட்டார்ஸ் இந்த மே மாதம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் இந்த மாடலை 2024 பாரத் மொபிலிட்டி நிகழ்விலும் காட்சிப்படுத்தியது. ஹூண்டாய் i20 N Line மாடலுக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் இந்த ரேசர் எடிஷன் மாடலை களமிறங்குகிறது. ரேசர் எடிஷன் என்பதைக் குறிப்பிடும் வகையிலான வெளிப்புறம் மற்றும் உட்புற டிசைன், வாய்ஸ் அசிஸ்டன்ஸூடன் கூடிய மின்சார சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் சார்ஜர், வெண்டிலேட்டட் சீட்கள், 6 ஏர்பேக்குகள், ESP, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய அம்சங்களுடன் இந்த அல்ட்ராஸ் ரேசர் எடிஷன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஃபோர்ஸ் கூர்க்கா 5 டோர் : இந்தியாவில் முன்னதாக 3 டோர் கூர்க்கா மட்டுமே விற்பனையில் இருந்த நிலையில், தற்போது 5 டோர் கூர்க்காவை அறிமுகம் செய்தது ஃபோர்ஸ் மோட்டார்ஸ். இதனை இந்த மே மாதம் வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 5 டோர் கூர்க்கா 3 டோர் கூர்காவில் இருந்து பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி பக்கவாட்டில் கூடுதலாக இரண்டு டோர்களுடன் இருக்கிறது கூர்க்கா 5 டோர். இரண்டு டோர்களுக்கு ஏற்ப, அதன் நீளம் மற்றும் வீல்பேஸூம் அதிகரித்துள்ளது. 3 டோர் கூர்க்காவானது 3,965 மிமீ நீளம், 2,080 மிமீ உயரம் மற்றும் 2,400 மிமீ வீல்பேஸைக் கொண்டிருக்கும் நிலையில், 5 டோர் கூர்க்காவானது 4,390 மிமீ நீளம், 2,095 மிமீ உயரம் மற்றும் 2,825 மிமீ வீல்பேஸுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Yoga Benefits : யோகா செய்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!
-
International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
-
Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?