Moto G64 5G Smartphone Launch : மோட்டோ நிறுவனம் Moto G64 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது

மோட்டோ நிறுவனம்  மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போனை  ஏப்ரல் 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.  இந்த புதிய மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி, சிப்செட் மற்றும்  6000mAh  பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த  மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் (Moto G64 5G Smartphone Launch) இந்தியாவில் குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மோட்டோ ஜி64 5ஜி சிறப்பம்சங்கள் (Moto G64 5G specifications)

1. Moto G64 5G Display

இந்த மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன்   6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் (Moto G64 5G Smartphone Launch) அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் 1080HD பிக்சல்ஸ் 120Hz  ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு  சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்பிலேவானது  சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என  மோட்டோ நிறுவனம் கூறியுள்ளது.  ஆண்ட்ராய்டு 14 (OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய மோட்டோ போன் அறிமுகமாகிறது.  மேலும்  இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

2. Moto G64 5G Storage

8GB  RAM  மற்றும் 128GB  மெமரி மற்றும் 12GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு  வரவுள்ளது. மோட்டோ நிறுவனம் இந்த ஜி64 5ஜி போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

3. Moto G64 5G Camera

OIS ஆதரவுடன்  50MB  பிரைமரி கேமரா + 8MB மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் மிக துல்லியமான  புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16MB கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

4. Moto G64 5G Battery

6000mAh  பேட்டரி வசதியுடன் இந்த மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது.  மேலும் இந்த ஸ்மார்ட்போனை விரைவாக  சார்ஜிங் செய்ய  30% வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் வசதியுடன்  விற்பனைக்கு வருகிறது.  இந்த புதிய Moto G64 5G போன் ஆனது ரூ.20,000-க்குள் குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply