Xiaomi India Fan Festival 2024 : Xiaomi India நிறுவனம் 2024 Fan Festival-லை அறிவித்துள்ளது
சியோமி இந்தியா நிறுவனம் (Xiaomi India) 2024 ஆம் ஆண்டிற்கான ஃபேன் ஃபெஸ்டிவல் விற்பனையை (Xiaomi India Fan Festival 2024) அறிவித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சீனாவின் நிறுவனமான சியோமி தனது பிராண்டை உலகளவில் அறிமுகம் செய்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக இந்த சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் நடக்கிறது. இதன்கீழ் சியோமி மற்றும் ரெட்மி பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட பல வகையான தயாரிப்புகளுக்கு பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கும் என சியோமி நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் ICICI Bank வங்கி கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஃபேன் ஃபெஸ்டிவலின் (Xiaomi India Fan Festival 2024) கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான எம்ஐ.காம் (Mi.com) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) ஆகிய நிறுவங்களின் வழியாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Xiaomi India Fan Festival 2024 - ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி :
சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் 2024-க்கான (Xiaomi India Fan Festival 2024) சிறப்பு விற்பனையின்படி ஷாவ்மீ 14 (Xiaomi 14) ஆனது அதன் வெளியீட்டு விலையான ரூ.69,999-க்கு பதிலாக ரூ.59,999-க்கு என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த Xiaomi 14 போன் மீது ரூ.10,000 தள்ளுபடி அறிவித்துள்ளது சியோமி நிறுவனம்.
Redmi Note 13 Pro Plus 5G :
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் அதன் ஆரம்ப வெளியீட்டு விலையான ரூ.31,999-க்கு பதிலாக ரூ.28,999-க்கு என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. Redmi 12 4G ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,999-க்கு பதிலாக ரூ.8,499-க்கு என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் ஆனது ரெட்மி 12 5G போன் ஆரம்ப விலையான ரூ.15,999-க்கு பதிலாக ரூ.10,999-க்கு என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. ரெட்மி 12 சீரிஸ்-க்கு பிறகு வெளியான Redmi 13C 5G ஸ்மார்ட்போன் ஆனது அசல் விலை ரூ.13,999-க்கு பதிலாக ரூ.9499-க்கு என்ற விலையில் கிடைக்கிறது. மேலும் Redmi Note 13 5G மாடலின் ஆரம்ப விலையான ரூ.22,999-க்கு பதிலாக ரூ.16,499-க்கு என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஸ்மார்ட் டிவிகள் மீது தள்ளுபடி :
43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் 4கே ஃபயர் டிவி (43-inch Redmi Smart Fire 4K TV)-யின் ஆரம்ப விலையான ரூ.42,999-க்கு பதிலாக ரூ.21,999-க்கு என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட் 4கே ஃபயர் டிவி மீது ரூ.21,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 50-இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரீஸ் (Xiaomi Smart TV X 50) மடலின் ஆரம்ப விலையான ரூ,44,999-க்கு பதிலாக ரூ.30,999-க்கு என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் 32-இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி ஏ சீரீஸ் (Xiaomi Smart TV A 32) மாடலின் ஆரம்ப விலையான ரூ.24,999-க்கு பதிலாக ரூ.11,699-க்கு விலையில் வாங்க கிடைக்கிறது.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்