சென்னையில் விரைவில் LNG Gas Powered Buses சோதனை ஓட்டம்

டீசல் பேருந்துகளில் இருந்து கேஸ் பேருந்துகளாக மாற்றம் - தமிழக அரசு முடிவு

சென்னையில் விரைவில் LNG Gas மூலம் இயங்கும் பேருந்துகளின் சோதனை ஓட்டம் (LNG Gas Powered Buses) நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்து உள்ளது. LNG (திரவ இயற்கை எரிவாயு) மூலம் இயங்கும் இரண்டு பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை (LNG Gas Powered Buses) தொடங்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முடிவு எடுத்து உள்ளது. ஒரு பேருந்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) விழுப்புரம் கோட்டம் மொஃபுசில் வழித்தடத்திலும், மற்றொரு பேருந்தை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) நகரப் பாதையிலும் சோதனை ஓட்டத்தை நடத்தி அறிமுகப்படுத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முடிவு எடுத்து உள்ளது.

LNG Gas Powered Buses - LNG பேருந்து மாற்றம் :

  • தமிழக மாநில அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து, TNSTC-க்கு (விழுப்புரம்) ஒரு பேருந்தும் மற்றும் MTC-க்கு  ஒரு பேருந்தும் டீசலில் இருந்து LNG-யாக (திரவ இயற்கை எரிவாயு) மாற்ற ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஒரு பேருந்து ஆனது அதன் முழு கொள்ளளவிற்கு நிரப்பப்பட்ட 180-கிலோ கிரையோஜெனிக் தொட்டியுடன் தோராயமாக 850-900 கிமீ வரை பயணிக்கும். இருந்தபோதும் ஒவ்வொரு பயணத்திலும் பயணிக்கும் மொத்த பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பேருந்துகளின் தரத்தைப் பொறுத்து இது மாறுபடும்.
  • பெரிய அளவிலான பேருந்து இயக்கங்களுக்கு இது சாத்தியமா என்பதை இந்த சோதனையை முடித்த பின்னரே தீர்மானிக்க முடியும்.
  • டீசல் மைலேஜ் லிட்டருக்கு 5.7 கிமீ என்றபோதும் பேருந்துகளில் தற்போது லிட்டருக்கு 5.68 கிமீ டீசல் மைலேஜ் மட்டுமே பெறமுடிகிறது.
  • இந்த சோதனை ஆனது வெற்றியடைந்தால், டீசல் பற்றாக்குறை உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களுக்கு எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் இந்த LNG பேருந்து திட்டத்தை விரிவுபடுத்தலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டு உள்ளது.
  • இந்த LNG மூலம் இயங்கும் பேருந்துகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. LNG மூலம் பயண வசதி மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply