விவோ நிறுவனத்தின் Vivo T3x 5G ஸ்மார்ட்போன் ஏப்ரல் 22ம் தேதி அறிமுகம்

விவோ நிறுவனம் தனது புதிய Vivo T3x 5G ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 22-ம் தேதி அறிமுகம் இந்திய சந்தையில் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இந்த Vivo T3x 5G போன் ரூ.15,000 என்ற பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ டி3எஸ் 5ஜி சிறப்பம்சங்கள் (Vivo T3x 5G Specifications) :

  • Vivo T3x 5G Display : இந்த விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த Vivo T3x 5G போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என இந்நிறுவனம் கூறியுள்ளது.

  • Vivo T3x 5G Storage : 6GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி இரண்டு வேரியண்ட் அம்சங்களுடன் இந்த அசத்தலான விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.

  • Vivo T3x 5G Camera : இந்த விவோ டி3எஸ் 5ஜி  ஸ்மார்ட்போனில் 50MB பிரைமரி கேமரா + 2MB Bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் தனியே 16MB கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • Vivo T3x 5G Battery : 6000 mAh பேட்டரி வசதியுடன் இந்த விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று இந்நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 40W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

  • Vivo T3x 5G Rate : இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட் போன் ரூ.15,000 என்ற குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply