Realme 12x 5G ஸ்மார்ட்போனை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
ரியல்மி 12எக்ஸ் 5ஜி சிறப்பம்சங்கள் (Realme 12x 5G Specifications) :
- Realme 12x 5G Display : இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட் போன் 6.72-இன்ச் ஃபுல் HD பிளஸ் மற்றும் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (OS) இயங்குதள வசதியுடன் ரியல்மி 12எக்ஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் வசதியுடன் ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேமிங் பயனர்களுக்காகவே மாலி ஜி57 GPU கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனை நம்பி வாங்கலாம் என ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது.
- Realme 12x 5G Storage : 4GB RAM + 128GB மெமரி மற்றும் 6GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 128GB மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனுக்கு இரண்டு வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் மூன்று வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் உடனடியாக கிடைக்கும் என ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Realme 12x 5G Camera : 50MB பிரைமரி கேமரா + 2MB மேக்ரோ கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி 12எக்ஸ் ஸ்மார்ட்போன் உதவியுடன் மிக துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் தனியே 8MB கேமரா வாங்கப்பட்டுள்ளது.
- Realme 12x 5G Battery : இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என இந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் விரைவாக சார்ஜ் செய்வதற்கு 45 W Super Vooc ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- Realme 12x 5G Colors : வுட்லேண்ட் கிரீன் (Woodland Green) மற்றும் ட்விலைட் பர்பிள் (Twilight Purple) ஆகிய இரண்டு நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
- Realme 12x 5G Rate : 4GB RAM + 128GB மெமரி கொண்ட ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனின் விலை ரூ.11,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6GB RAM + 128GB மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,499 விலையிலும் மற்றும் 8GB RAM + 128GB மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,999 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்