சாம்சங் நிறுவனம் நோட்புக் மாடலில் Samsung Galaxy Book 4 லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது

  • நீண்ட காலத்திற்கு பிறகு சாம்சங் (Samsung) நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு லேப்டாப் சாதனத்தை பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லேப்டாப் சாம்சங் கேலக்ஸி புக் 4 (Samsung Galaxy Book 4) ஆகும்.
  • சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த Samsung Galaxy Book 4 லேப்டாப் நோட்புக் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த புதிய லேப்டாப் சாதனம் மிகவும் சக்தி வாய்ந்த கனெக்டிவிட்டி, பெர்பார்மென்ஸ் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி புக் 4 (Samsung Galaxy Book 4) :

  1. Samsung Galaxy Book 4 Display : இந்த Samsung Galaxy Book 4 லேப்டாப் 15.6′ இன்ச் அளவு கொண்ட HD டிஸ்பிளேவுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இது மிகவும் கிரிஸ்பான மற்றும் கிளாரிட்டியான டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும் என சாம்சங்  நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங் தான் மிகவும் தரமான டிஸ்பிளேக்களை உருவாக்கி வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதற்கு உதாரணமாக மீண்டும் சாம்சங் கேலக்ஸி புக் 4 டிஸ்பிளே மூலம் நிரூபித்துள்ளது. மேலும் கேலக்ஸி புக் 4 லேப்டாப் RJ45 LAN லேன் போர்ட் ஆதரவையும் கொண்டுள்ளது.

  2. Samsung Galaxy Book 4 Colors : இந்த புதிய சாம்சங் கேலக்ஸி புக் 4 லேப்டாப் ஸ்லிம் வடிவில் மெட்டல் சேசிஸ் பாடியுடன் வெறும் 1.55 கிலோ எடை உடன் விற்பனைக்கு வந்துள்ளது. Galaxy Book 4 லேப்டாப் இப்போது இந்தியாவில் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது : வெள்ளி மற்றும் சாம்பல். சாம்சங்கின் பிரத்தியேகமான ‘AI பவர் போட்டோ ரீமாஸ்டர்’ அம்சத்துடன் கேலக்ஸி புக் 4 லேப்டாப் வெளிவந்துள்ளது. இந்த AI பவர் போட்டோ ரீமாஸ்டர் அம்சம் குறைந்த குவாலிட்டியில் எடுத்த புகைப்படங்களை AI உதவியுடன் உயர்தரத்திற்கு மாற்றும் எனவும் புகைப்படங்களில் காணப்படும் குறைந்த லைட் மற்றும் நிழல்களை நீக்கி புகைப்படத்தின் கிளாரிட்டியை அதிகரிக்கும் என சாம்சங்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

  3. Samsung Galaxy Book 4 Price : இந்த கேலக்ஸி புக் 4 லேப்டாப் உடன் இன்டெல் கிராபிக்ஸ் 1TB எக்ஸ்பெண்டபிள் SSD ஆதரவுடன் வருகிறது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மாஸ் அம்சத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்  சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்  கேமராவை வெப் கேமராவாக பயன்படுத்த அனுபவிக்கும் புதிய தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கும் என இந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த Samsung Galaxy Book 4 லேப்டாப் சாதனம் இந்திய சந்தையில் ரூ.74,990 என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த லேப்டாப்  வாங்கும் பயனாளர்களுக்கு ரூ.5,000 மதிப்புள்ள பேங்க் கேஷ்பேக் மற்றும் ரூ.4,000 வரை போனஸ் மற்றும் 24 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI மற்றும் 10% தள்ளுபடி ஆகியவற்றை வழங்குகிறது.

Latest Slideshows

Leave a Reply