Lenovo Tab M11 Tablet Model Launched in India : லெனோவா நிறுவனம் Lenovo Tab M11 டேப்லெட் மாடலை ரூ.15,000 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது...!

லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவா டேப் எம்11 (Lenovo Tab M11 Tablet Model Launched in India) எனும் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் லெனோவா டேப் எம்11 மாடலின் அறிமுகம் குறித்த தகவல்கள் மற்றும் சிறப்பம்சங்களை  பார்க்கலாம்.

லெனோவா டேப் எம்11 சிறப்பம்சங்கள் (Lenovo Tab M11 specifications):

1. Lenovo Tab M11 Display :

இந்த லெனோவா டேப்  11-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன்  அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் டிஸ்பிளேவில் 90Hz  ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்  400 நிட்ஸ் ப்ரைட்னஸ், Netflix HD சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படஉள்ளது.

லெனோவா டேப் எம்11 மாடல் ஆனது சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ G88 சிப்செட் (MediaTek Helio G88 SoC) வசதியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும்  இந்த சிப்செட்டானது  மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என  லெனோவா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலி  G52 MP2 GPU  கிராபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி  வாங்கலாம்  என லெனோவா நிறுவனம் கூறியுள்ளது.

2. Lenovo Tab M11 Storage :

8GB  RAM  மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வசதியுடன்  இந்த  லெனோவா டேப் எம்11 (Lenovo Tab M11 Tablet Model Launched in India) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவா டேப் எம்11 மாடலில் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

லெனோவா டேப் எம்11 ஆது ஆண்ட்ராய்டு 14 (OS) இயங்குதளத்துடன் வெளிவரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 15 (Android 15) வரை தடையில்லாத அப்டேட்டை வழங்கும்  என்றும்  மேலும்  4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்கிரேடுகளை பெரும் என்ற  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெனோவா நிறுவனம்  இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

3. Lenovo Tab M11 Battery :

7000mAh  பேட்டரி வசதியுடன் லெனோவா டேப் எம்11 (Lenovo Tab M11 Tablet Model Launched in India) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மாடல்  நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த டேப்லெட் மாடலின்  பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் சார்ஜிங வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது லெனோவா டேப் எம்11 மாடல் அமேசான் (Amazon) இந்தியா மைக்ரோசைட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இந்த டேப்லெட் மாடலின் டீசர் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.  இந்த புதிய டேப்லெட் ரூ.15,000 குறைந்த பட்ஜெட் விலையில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply