May 1 Labour Day : தொழிலாளர் தின வரலாறும் முக்கியத்துவமும்

தொழிலாளர் வர்க்கத்தை கௌரவிக்கும் வகையில், மே தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று (May 1 Labour Day) கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் தொழிற்சாலைகளில் வேலை நேரம் 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. இதனால், தொழிலாளர்களின் உடலும் மனமும் சோர்வடைந்தன. இவர்களின் நலன் கருதி 8 மணி நேர வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேர பொழுது போக்கு என்ற நோக்கமே பல போராட்டங்களாக உருவெடுத்தது மே தினம். இந்நிலையில் தொழிலாளர் தின வரலாறு பற்றி காணலாம்.

May 1 Labour Day :

16 மணி நேரத்துக்கும் அதிகமான வேலைக்காகத் தொழிலாளர்களை சுரண்டப்பட்ட காலகட்டத்தில், உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டத்தின் பயனாக 8 மணி நேர வேலை நேரமாக உறுதி செய்யப்பட்டது. இந்தப் போராட்டம் தான் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட பின்னணியாக அமைந்தது. சில நாடுகளில் இது தொழிலாளர் தினம் என்றும், உழைப்பாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் ஆற்றிய மகத்தான பணி மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மே தினம் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாப்பதும் அவர்களின் உழைப்பு மற்றும் முயற்சிகளை மதித்து அவர்களை தற்காப்பதே தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கமாகும்.

தொழிலாளர் தின வரலாறு :

தொழிலாளர் தின வரலாறு அமெரிக்காவில் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் தொடங்குகிறது. 1886ல், அமெரிக்காவில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. அதில் 8 மணி நேர வேலை நேரம் வலியுறுத்தப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட்டில் தொழிலாளர்களின் உரிமைக்குரல் மே 1 ஆம் தேதி தீவிரமாக ஒலித்தது. இதன் பலனாக தான் 8 மணி நேர வேலை நேரம் அமலுக்கு வந்தது என்பதால் மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக (May 1 Labour Day) அறிவிக்கப்பட்டது. ஹேமார்க்கெட்டில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 7 காவலர்களும், போராட்ட களத்தில் நின்றிருந்த 4 பேரும் பலியாகினர் என்பது வரலாற்றில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது. நமது நாட்டில் 1923 ஆம் ஆண்டு முதன்முறையாக மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினமாக (May 1 Labour Day) கொண்டாடப்பட்டது. இந்த விழா அப்போதைய மெட்ராஸில் நடைபெற்றது.

சமீபத்தில் தமிழகத்தில் 12 மணி நேர வேலை மசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. தொழிற்சாலைகள் திருத்த மசோதாவில் இந்த திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய போது, ​​தமிழக முதல்வர் ஸ்டாலின், மசோதாவை நிறுத்தி வைத்தார். தொழிலாளர் தினமான இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா வாபஸ் பெறப்பட்டுள்ளதாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் பின்னணியில் இந்த ஆண்டு தொழிலாளர் தினம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

2024 தொழிலாளர் தினம் :

சர்வதேச தொழிலாளர் தினத்தை நாம் அனுசரிக்கும்போது, ​​ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதியின் குறிப்பிடத்தக்க காலண்டர் தேதி சிறப்புப் பொருளைக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு புதன்கிழமையன்று நடைபெறும் இந்த உலகளாவிய கொண்டாட்டம், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது. மே 1 இன் தனித்துவமான தேதி, சமூகங்கள் முழுவதும் வளர்ச்சியை வளர்ப்பதில் அவர்களின் விலைமதிப்பற்ற பங்கை அங்கீகரிக்கும் அதே வேளையில் தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்க சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இந்த சிறப்பு 2024 தேதியில் சமூகங்கள் ஒன்றிணைவதால், உலகளவில் நியாயம், சமத்துவம் மற்றும் பொருளாதார நீதிக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு உள்ளது. அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

Latest Slideshows

Leave a Reply