New Logo In Tamil Nadu Sports Industry : புதிய லோகோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை (New Logo In Tamil Nadu Sports Industry) வெளியிட்டார்.

New Logo In Tamil Nadu Sports Industry - விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை :

விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக திகழ்கிறது. இந்தியாவில் விளையாட்டில் சாதனை படைக்கும் பூமியாக தமிழ் நாட்டை மாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார். மேலும் அவர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் பல மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் அடைந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் கேலோ இந்தியா பிரச்சாரத்தின் கீழ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க கல்விக்கூடங்கள், ஆயிரம் கேலோ இந்தியா மையங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்களை உருவாக்கி உள்ளது. விளையாட்டுத் துறையில் எண்ணில் அடங்காத பல சாதனைகள் பெற்றுள்ளது. இந்தியா வரும் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எடுத்து நடத்த உள்ளது. சர்வதேச அளவில் தமிழ்நாடு பல்வேறு விளையாட்டுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதனால் 30 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த இலச்சினை (New Logo In Tamil Nadu Sports Industry) மாற்ற முடிவு செய்யப்பட்டது. 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தவும் மற்றும் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளை பிரிதிபலிக்கவும் தமிழ்நாட்டின் வரைபடத்தை உள்ளடக்கிய புதிய இலச்சினை (New Logo In Tamil Nadu Sports Industry) ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய இலச்சினையில் இடம்பெற்றிருக்கும் நீல நிறம் ஆனது சுதந்திரம் மற்றும் உத்வேகத்தை குறிக்கும். மேலும், மஞ்சள் நிறம் ஆனது ஆற்றல் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை குறிக்கும். தமிழ்நாடு விளையாட்டுத் துறை முன்னேற்றத்தின் சான்றாக இலச்சினையைச் சுற்றி வட்ட வடிவம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இன்றைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களுக்கு விளையாட்டு தொடர்பான துறைகளில் தங்கள் வாழ்க்கையை உருவாக்க மற்றும் சிறந்த எதிர்காலம் அமைத்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர்கள் நிஷித் பிராமானிக், ஆளுநர் ஆர்.என்.ரவி, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். 

Latest Slideshows

Leave a Reply