One-Stop Centers for Disabled Persons in TN : தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு One-Stop Centers

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் தமிழ்நாடு  மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆனது  துணைப்பிரிவு மட்டத்தில் 39 ஒரு நிறுத்த மையங்களை (OSCs – One-Stop Centers) விரைவில் நிறுவ உள்ளது.  மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் (RPWD – Rights of Persons with Disabilities (RPWD) Act) சட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக OSC கள் நிறுவப்பட  உள்ளது. RIGHTS-ன் $162 மில்லியன் முயற்சியின் கீழ் OSCகள் நிறுவப்படவுள்ளன. தமிழ்நாடு  RPWD-ன் சட்ட அமலாக்கத்தை 2027 ஆம் ஆண்டிற்குள் எளிதாக்குவதற்காக உலக வங்கியால் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 97 OSC களை உருவாக்குவதற்கான ஏற்பாடு உள்ளது. ஒன்று மற்றும் இரண்டு கட்டங்களில் இந்த திட்டத்தின் கீழ் 39 மையங்கள் உருவாக்கப்படும். இந்த  முதல் கட்ட திட்டங்களுக்கான அரசு கட்டிடங்களை அடையாளம் காணும் பணி ஆனது நிறைவடைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு அரசு கட்டடங்களை சீரமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க சுகாதார வசதிகளுக்கு அருகில் இந்த  OSC கள் அமைக்கப்படவுள்ளன.

One-Stop Centers (OSC) சிறப்புக்கள் :

  • இந்த  OSC கள் ஊனமுற்ற  நபர்களின் வீடுகளுக்கு அருகில் விரிவான நலன்புரி சேவைகள் மற்றும் மறுவாழ்வு ஆதரவை வழங்கும் மத்திய மாவட்ட வாரியான மையங்களாக செயல்படும்.
  • மறுவாழ்வு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகளின்  வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லும் முயற்சி ஆகும். மாற்றுத்திறனாளிகள் (PwD) பயணிக்கும் தூரத்தை இந்த  OSC கள் குறைக்கும்.
  • தங்களுக்கு தேவையான அனைத்து  உதவிகளையும் ஊனமுற்ற நபர்கள் எளிதாகப் பெறுவதை உறுதிசெய்வதையும் மற்றும் சேவைகளை மைய அடிப்படையிலான அணுகுமுறையிலிருந்து குடும்பம்/சமூகம் சார்ந்ததாக மாற்றுவதையும் இந்த OSC  நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உற்பத்தி ரீதியாக பொருளாதார மறுவாழ்வில் மாற்றுத்திறனாளிகளை எவ்வாறு சேர்க்கலாம் என்பதில் இந்த OSC  நடவடிக்கை கவனம் செலுத்தும்.
  • தொகுதி மற்றும் சுற்றுப்புற மையங்களில் ஆன்லைன் மூலம் மறுவாழ்வு வசதிகளையும் இந்த OSC  நடவடிக்கை செயல்படுத்தும்.
  • தேவையின் அடிப்படையில் 60-70 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மையத்துடன் சுற்றுப்புற மையங்கள் உருவாக்கப்படும்.
  • ஊனமுற்ற நபர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் சேவைகள்  ஆனது வழங்கப்படும். 
  • ஒரு உளவியல் நிபுணர், ஒரு பிசியோதெரபிஸ்ட், ஒரு பேச்சு ஆடியோலஜிஸ்ட், ஒரு தொழில் சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு சிறப்புக் கல்வியாளர் உட்பட ஒன்பது நிபுணர்கள் இந்த OSC மையங்களில் இருப்பார்கள்.

Latest Slideshows

Leave a Reply