Election Commission Of India Introduced New App : இந்திய தேர்தல் ஆணையம் சுவிதா மற்றும் சாக்‌ஷம் இரண்டு புதிய செயலிகள் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்காக “சுவிதா” மற்றும் “சாக்‌ஷம்” (Saksham) என்ற பெயரில் இரண்டு புதிய செயலிகள் (Election Commission Of India Introduced New App) உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு செயலிகள் மூலமாக வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

சுவிதா (Suvidha) :

அந்த வகையில் தற்போது ‘சுவிதா’  (Suvidha) செயலி (App) வேட்பாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்வது மற்றும் வேட்புமனுவின் நிலை குறித்து அறிந்து கொள்வது மற்றும் தேர்தல் பிரச்சாரத்துக்கான அனுமதி பெறுவது, அனுமதி விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வது, அனுமதிக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பெற்று பதிவு செய்தல் போன்ற பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ‘சுவிதா’ செயலி மூலம் வேட்பாளர்களின் நேரம் மிச்சமாவதுடன் சரியான விவரங்களையும் பெற முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சாக்‌ஷம் (Saksham) :

சாக்‌ஷம் (Saksham) செயலியைப் பொறுத்தவரை மாற்றுத் திறனாளி (Physically Handicapped) வாக்காளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்வதற்காக பிரத்யேகமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இந்த சாக்‌ஷம் (Saksham) செயலியில் பதிவு செய்தால் இதில் உள்ள பெயர், முகவரி, செல்போன் எண், மாநிலம், மாவட்டம், தொகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் கிடைத்துவிடும். மேலும் வாக்குப்பதிவு தினத்தன்று மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை இதன்மூலம் பெற முடியும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Election Commission Of India Introduced New App - குரல்வழி உதவி :

இந்த செயலியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு குரல்வழி உதவி மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத் திறனாளிக்கு பேசினால் எழுத்தாக பதிவாகும் வசதி போன்றவை உள்ளன. மேலும் இந்த செயலியில் வாக்குச்சாவடி மையம் அதன் அமைவிடம் மற்றும் அந்த வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வசதிகள் வாக்குப்பதிவு அலுவலர்களின் தொடர்பு எண்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். மேலும் மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவின் போது சந்திக்கும் பிரச்சனைகளையும் இந்த செயலியில் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு செயலிகளையும் (Election Commission Of India Introduced New App) கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ்சி-யில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply