Sangeetha Kalanidhi 2024 Award : கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வாகியுள்ளார்

டி.எம்.கிருஷ்ணா என்ற பிரபல பாடகர் 2024ல் தனது இசைக்காக சிறப்பு விருதை (Sangeetha Kalanidhi 2024 Award) பெற உள்ளார். இந்த விருதை சென்னை மியூசிக் அகாடமி வழங்கவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கர்நாடக சங்கீதத்தின் மரியாதைக்குரிய அமைப்பாகத் திகழும் தி மியூசிக் அகாடமி ஆனது கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வுசெய்து சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிகாலஜிஸ்ட் விருது, நிருத்ய கலாநிதி என பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு,

  • சங்கீத கலாநிதி விருது – டி.எம். கிருஷ்ணா
  • டிடிகே விருது – திருவையாறு சகோதரர்கள், ஹெச்.கே. நரசிம்மமூர்த்தி
  • மியூசிகாலஜிஸ்ட் விருது – டாக்டர் மார்க்ரெட் பாஸின்
  • நிருத்ய கலாநிதி விருது – டாக்டர் நீனா பிரசாத்
  • சங்கீத கலா ஆச்சார்யா விருது – கீதா ஆச்சார்யா மற்றும் பேராசிரியர் பரசால ரவி

ஆகியோருக்கு வழங்கப்படுவதாக மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணா தனது கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் சமூக கருத்துக்களையும் மற்றும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி வருகிறார். சென்னை மியூசிக் அகாடமி ஆனது இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணாவின் இந்த செயலை பாராட்டி சென்னை மியூசிக் அகாடமி சார்பில் 2024-ம் ஆண்டு சங்கீத கலாநிதி விருதுக்கு (Sangeetha Kalanidhi 2024 Award) டி.எம்.கிருஷ்ணாவை தேர்வு செய்துள்ளது. ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வாகியுள்ள டி.எம்.கிருஷ்ணா இந்தாண்டு நடைபெறும் மியூசிக் அகாடமியின் 98 ஆவது ஆண்டு மாநாட்டை தலைமை தாங்குவார்.

Sangeetha Kalanidhi 2024 Award - இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணா - ஓர் குறிப்பு :

கிருஷ்ணா ஜனவரி 22, 1976 அன்று சென்னையில் டிஎம் ரங்காச்சாரி மற்றும் அவரது மனைவி பிரேமா ரங்காச்சாரி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். கிருஷ்ணா சென்னை கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை பள்ளியின் முன்னாள் மாணவர் மற்றும் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் B.A. பட்டம் பெற்றவர். கிருஷ்ணா பாகவத்துல சீதாராம சர்மாவிடம் இசைப் பயிற்சி பெற்றவர். கிருஷ்ணாவின் மியூசிக்  வாழ்க்கை 12 வயதில் சென்னை (இந்தியா) மியூசிக் அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்பிரிட் ஆஃப் யூத் தொடரில் தொடங்கியது. இவரது மனைவி புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் சங்கீதா சிவகுமார் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் ஒரு சிறந்த கர்நாடக பாடகர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் 2016 ஆம் ஆண்டில் ராமன் மகசேசே விருது பெற்றவர்

Latest Slideshows

Leave a Reply