Order Of The True Gyalpo Award : பிரதமர் மோடி பூடானின் உயரிய விருதான 'Order Of The True Gyalpo' பெற்றார்

கடந்த 22/03/2024 வெள்ளியன்று  பூடானின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ’ விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் என்ற பெருமையை (Order Of The True Gyalpo Award) பிரதமர் நரேந்திர மோடி பெற்றார். இது வாழ்நாள் சாதனைக்கு அரசு சார்பில் மக்களுக்கும், நாட்டிற்கும் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ததற்காக வழங்கப்படும் மதிப்புமிக்க விருதாக உள்ளது. வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. பிரதமர் மோடிக்கு இதற்கு முன்பே பல வெளிநாடுகளில் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோரிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டு இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

இந்த மதிப்புமிக்க விருது (Order Of The True Gyalpo Award) ஆனது அரசியல், கலாச்சாரம், சமூகம் அல்லது மனிதாபிமான முயற்சிகள் ஆகிய துறைகளில் தனித்துவத்துடன் பணியாற்றியவர்களுக்கு மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம் ஆகும். இந்த மதிப்புமிக்க விருதானது, விருது நிறுவப்பட்டதிலிருந்து நான்கு நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Order Of The True Gyalpo Award - விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி உரை :

விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, “இது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. இந்த விருது ஆனது இந்தியா மற்றும் 140 கோடி இந்தியர்களின் பெருமை ஆகும். இதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். பூடான் – இந்தியா உறவுகள் ஆனது கலாச்சார பரிமாற்றங்கள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஆன்மீக தொடர்புகளால் குறிக்கப்படுகின்றன. பூடான் ஆனது இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக முக்கிய பங்கு வகித்து வருகிறது. பூடான் – இந்தியா நட்புறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான எனது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறேன். மேலும் இந்தியா-பூடான் நட்பு “புதிய உயரங்களைத் தொடரும்” என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, பூடான் மக்களின் விருந்தோம்பலுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply