Introduction Of Store Generic Drugs : Medplus ஆனது ‘Store Generic’ மருந்துகளை அறிமுகப்படுத்துகிறது

Introduction Of Store Generic Drugs :

இந்தியாவில் உள்ள முன்னணி மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக Medplus நிறுவனம் உள்ளது. இந்த முன்னணி மருந்து விற்பனை  நிறுவனமான Medplus ஆனது மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் ஒரு பிரபலமான நடைமுறையாக செயல்படும் ‘Store Generic’ முறையை (Introduction Of Store Generic Drugs) இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறது. Medplus நிறுவனர் கங்காடி மதுகர் ரெட்டி, “சொந்தமாக மருந்துகள் தயாரித்து ‘ஸ்டோர் ஜெனரிக்’ முறையில் மெட்பிளஸ் நிறுவனம் ஆனது வாடிக்கையாளர்களுக்கு 50% முதல் 80% வரை தள்ளுபடி விலையில் மருந்துகளை  விற்பனை செய்ய உள்ளது” என்று  தெரிவித்துள்ளார். Medplus நிறுவனம் ஆனது CDMO நிறுவனமான Akums Drugs And Pharmaceuticals-லிருந்து அதன் ‘Store Generic’ மருந்துகளை உற்பத்தி செய்கிறது. Akums Drugs And Pharmaceuticals அதன் உயர்தர தயாரிப்புகளை வழங்கி நுகர்வோரின் நல்வாழ்வுக்காக ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ‘Store Generic’ முறை மூலம் Medplus நிறுவனம் தனது தரமான சொந்த தயாரிப்பு மருந்துகளை தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் வழங்க இருக்கிறது. முதல் கட்டமாக, Medplus நிறுவனம் நாட்டில் உள்ள பிரபல மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து 700-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மருந்துகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அமைந்துள்ள Akums Drugs And Pharmaceuticals நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 450 வகையான மருந்துகள் ஆனது தயாரிக்கப்படுகின்றது.

இந்த ‘Store Generic’ மூலம், Medplus நிறுவனம் அதன் சொந்த பிராண்டின் 600+ மருந்துகளை 4,200-க்கும் மேற்பட்ட மருந்தகங்களுக்கு வழங்குகிறது. அதாவது 4,200-க்கும் மேற்பட்ட ரீடெய்ல் மருந்தகங்கள் மூலம் Medplus நிறுவனம் ஆனது தெலங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா,  கர்நாடகா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா உட்பட பத்து மாநிலங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்த மருந்துகளை வழங்கி வருகிறது.

Medplus நிறுவனம் ‘Store Generic’ முறையை தெலங்கானாவைத் தொடர்ந்து, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்துகிறது. Medplus நிறுவனம் ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்கு சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக சேனல்களுக்கான செலவுகள் இல்லாததால் 50% – 80% வரை தள்ளுபடியை வழங்குகிறது. இந்த 50% – 80% வரையான தள்ளுபடி மூலம், 26.2 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் மருந்து செலவுகள் ஆனது ரூ.139.7 கோடி வரை குறைந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply