Happy Holi 2024 : ஹோலி பண்டிகையின் வரலாறும், கொண்டாட்டமும்

இந்திய பாரம்பரியத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை. இது வண்ணங்களால் கொண்டாடப்படுகிறது. பண்டிகைகள் பெரும்பாலும் இயற்கையைக் கொண்டாடும் விதத்தில் கொண்டாடப்படுகின்றன. ஹோலி என்பது இயற்கையின் அழகைக் கொண்டாடும் பண்டிகை ஆகும். அதாவது ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றங்களுக்கு ஏற்ப சில பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. உணவுச் சங்கிலியின் மூலமாக சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தியாவின் பல மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல், வசந்தத்தை வரவேற்கும் பண்டிகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது. குளிர்காலத்திற்குப் பிறகு கோடை காலத்தை வரவேற்கும் விதமாக வட இந்தியாவில் உள்ள மக்கள் வண்ணங்களைத் தூவி மகிழ்ச்சியுடன் ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். தனித்தனி நிறங்கள் என்றாலும், எல்லா வண்ணங்களின் கலவை நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

Happy Holi 2024 - ஹோலி பண்டிகை 2024 :

இந்த விழா வட இந்தியாவில் மாசி மாத பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, குஜராத்தில் ஐந்து நாள் பண்டிகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது. உறவுகளை கொண்டாடும் பண்டிகையாகவும் இது கடைபிடிக்கப்படுகிறது. கால மாற்றத்தால், நாட்டின் பிற பகுதிகளிலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு ஒரு காரணம் தேவையா என்ன? இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி (Happy Holi 2024) கொண்டாடப்படுகிறது. இந்த ஹோலி பண்டிகை அன்று உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி இந்த நாளை வண்ணப் பொடிகள், வண்ணத் தண்ணீர், வண்ணப் பொடிகள் நிரப்பிய தண்ணீர் பலூன்களுடன் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் (Happy Holi 2024) அனைவர் மீதும் வண்ணங்களை தூவி கொண்டாடுகிறார்கள். கருநீலம், நிலம், ஊதா, பச்சை,ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் சிவப்பு போன்ற சூரியக் கதிர்களால் உருவாகும் வானவில்லின் வண்ணங்கள் இந்தக் கொண்டாட்டத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இனிப்புகளும் பரிமாறப்படுகின்றன. எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபடவும், புதிய நம்பிக்கையான நாட்களை வரவேற்கவும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஹோலி பண்டிகையின் வரலாறு :

ஹோலி என்பது வசந்தத்தை வரவேற்கும் ஒரு கலாச்சார விழா. இதற்கு ஒரு புராணக்கதையும் உள்ளது. ஹிரண்யனின் தங்கையான ஹோலிகா, நாராயணனின் தீவிர பக்தனான பிரகலாதனைக் கொல்ல முயன்றாள். அவளை கட்டியணைப்பவர் யாராக இருந்தாலும் தீயில் அழிந்து போவார்கள் என்ற நிலையில் ஹோலிகா, குழந்தை பிரகலாதனைக் கட்டியணைத்து அழிக்க முடிவு செய்தாள், தன்னை யார் கட்டினாலும் தீயில் அழிந்து விடுமோ என்று பயந்தாள். அப்படியிருக்க, நாராயணனின் அருளைப் பெற்ற தெய்வீகக் குழந்தையை ஹோலிகா தழுவியபோது, தன்னைத்தானே எரித்துக் கொண்டாள். தீய எண்ணங்களுடன் வாழ்ந்த ஹோலிகா இறந்த நாளில்தான் மக்களால் ஹோலி பண்டிகை உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இன்றும் வட மாநிலங்களிலும் ஹோலிகாவை எரிக்கும் வழக்கமும் உள்ளது. அனைத்து தீமைகளையும் போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஹோலி (Happy Holi 2024) கொண்டாடப்படுகிறது.

மற்றொரு கதை என்னவென்றால், ஹோலி என்பது கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணரும் ராதையும் மகிழ்ந்து கொண்டாடிய திருவிழா ஹோலி பண்டிகை என்று சொல்லப்படுகிறது. ஹோலி என்பது ஆயர்பாடி மக்களும் ஆவினங்களும் கொண்டாடிய ஒரு மகிழ்ச்சியான பண்டிகை ஹோலி. இந்த ஹோலி பண்டிகை மகிழ்ச்சியின் வெளிப்பாடாகும், உறவுகள் மற்றும் நண்பர்கள் போன்ற எந்த பேதங்களும் இல்லாமல் கொண்டாடப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து வசந்தத்தை மகிழ்ச்சியுடனும் புது நம்பிக்கையுடனும் வரவேற்போம். இந்த வசந்த காலம் நமக்கு எல்லையில்லா ஆனந்தத்தைத் தரட்டும், ஹாப்பி ஹோலி.

Latest Slideshows

Leave a Reply