Operation Of Additional Buses : கிளாம்பாக்கத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கம்

தமிழக அரசு போக்குவரத்து துறை மக்களின் வசதிக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆனது,

  • முன்பதிவு
  • கூடுதல் பஸ்கள் இயக்கம்
  • இருக்கைகள் அதிகப்படுத்துதல்

போன்றவற்றில் நல்ல வசதிகள் மற்றும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

முன்பதிவில் முன்னேற்றம் :

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் முன்பதிவு ஆனது வழக்கம் போல் தொடரும். அது மட்டுமல்லாமல் தற்போது மீதமுள்ள பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிருந்தும்  முன்பதிவு செய்து பயணிக்க இயலும்.

Operation Of Additional Buses - கூடுதல் பஸ்கள் இயக்கம் :

தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆனது எப்பொழுதும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, கூடுதல் பஸ்களை இயக்கி (Operation Of Additional Buses) வருகின்றது. விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. பொதுவாக, தமிழகத்தில் மக்கள் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த மக்களின் தேவைக்காக மற்றும் வசதிக்காக ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களை இயக்கி வந்துள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சிறப்பு பஸ்களை இயக்கி வந்துள்ளது. அனைத்து போக்குவரத்து நிலையங்களிலும் அலைமோதும் மக்கள் கூட்டத்தின் நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு ஆனது தற்போது கூடுதல் பேருந்துகளை (Operation Of Additional Buses) அறிவித்துள்ளது. தற்போது தமிழக பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலர்களுக்கு கோடை விடுமுறை ஆனது ஆரம்பமாகி உள்ளது. அதேபோல் சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி அடுத்தடுத்து தொடர உள்ளன (ஹோலி பண்டிகை, பௌர்ணமி, 23ம் தேதி 4வது சனிக்கிழமை மற்றும் மார்ச் 24ம் தேதி சுபமுகூர்த்தம்).

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆனது தற்போது 380-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இது விடுமுறை நாட்களை கொண்டாட சுற்றுலா தளங்கள், கோயில்கள் அல்லது தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்துள்ளது. தமிழக போக்குவரத்து கழகமானது நேற்று அதாவது மார்ச் 22 முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி நேற்று சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 305 பேருந்துகளும் மற்றும் மார்ச் 23ம் தேதியில் இருந்து 390 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. வருகின்ற ஏப்ரல் 12ம் தேதியுடன் பொதுத் தேர்வுகள் தமிழக மாணவர்களுக்கு முடிந்து ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது. எனவே மக்கள் கூட்டத்தின் நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு ஆனது இக்கோடை விடுமுறை காலம் முழுவதும் தினசரி 800 பேருந்துகளையும், 364 ஏ.சி. பேருந்துகளையும், 67 ஸ்பேர் பேருந்துகளையும், வார விடுமுறை நாட்களில் 1000 பேருந்துகளையும் இயக்க (Operation Of Additional Buses) திட்டமிட்டுள்ளது.

இருக்கைகள் அதிகப்படுத்துதல் :

மேலும் மக்கள் கூட்டத்தின் நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆனது இருக்கைகளை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்து துறை மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply