100-Day Work Plan Wage Hikes : 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டமான 100 நாள் வேலைக்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை, மாநில வாரியாக மத்திய அரசு (100-Day Work Plan Wage Hikes) உயர்த்தியுள்ளது.

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு(100-Day Work Plan Wage Hikes)

இதன்படி, தமிழகத்தில் தற்போது தினக்கூலியாக 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிக்கு 319  ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்  என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பளம் மாநில வாரியாக (100-Day Work Plan Wage Hikes) உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இனி ஒரு நாளைக்கு 319 ரூபாய் வழங்கப்படும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வாக்காளர்களை கவரும் வகையில் மத்திய, மாநில அரசுகள் எந்த நலத்திட்டங்களையும் அறிவிக்கக்கூடாது. அப்படி அறிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இது குற்றமாகும். அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்த ஊதிய உயர்வு பிப்ரவரி 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அறிவிப்பின்படி, மாநில வாரியாக கீழ்க்கண்ட ஊதிய விவரங்கள் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடவைடிகை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மாநில வாரிய ஊதிய உயர்வு :

தமிழ்நாடு ரூ.319, அசாம் ரூ.249, பீகார் ரூ.245, சத்தீஸ்கர் ரூ.243, கோவா ரூ.356, குஜராத் ரூ.280, ஹரியானா ரூ.374, இமாச்சல பிரதேசம் ரூ.236 – ரூ.295, ஜம்மு & காஷ்மீர் ரூ.259,ம் லடாக் ரூ.259, ஜார்கண்ட் ரூ.245, கர்நாடகா ரூ.349, கேரளா ரூ.346, மத்திய பிரதேசம் ரூ.243, மகாராஷ்டிரா ரூ.297, மணிப்பூர் ரூ.272, மேகாலயா ரூ.254, மிசோரம் ரூ.266, ராஜஸ்தான் ரூ.266, சிக்கிம் ரூ.249, தெலுங்கானா 300 ரூ, திரிபுரா ரூ.242, உத்தரப்பிரதேசம் ரூ.237, உத்தரகாண்ட் ரூ.237, மேற்கு வங்கம் ரூ.250, அந்தமான் & நிக்கோபார் ரூ.329, லட்சத்தீவு ரூ.315, புதுச்சேரி ரூ.319, ஆந்திர பிரதேசம் ரூ.300, அருணாச்சல பிரதேசம் ரூ.234,  நாகாலாந்து ரூ.234, ஒடிசா ரூ.254, பஞ்சாப் ரூ.322.

Latest Slideshows

Leave a Reply