Padma Vibhushan Award Winner - Platform Tamil

Padma Vibhushan Award Winner : பத்ம விபூஷன் விருது பெற்ற சகலகலா வல்லவர் வைஜெயந்திமாலா

Padma Vibhushan Award Winner :

தமிழகத்தைச் சோ்ந்த வைஜெயந்திமாலா சிறந்த அரசியல்வாதி, கர்நாடக சங்கீத கலைஞர் மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவருக்கு 26/01/2024 குடியரசு தினத்தன்று பத்ம விபூஷன் விருது (Padma Vibhushan Award Winner) வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இவர் 13, 1933 அன்று திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக ஐயங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை எம்.டி.ராமன் மற்றும்  தாயார் வசுந்தராதேவி ஆவார். இவரது தாயார் ஒரு புகழ்பெற்ற தமிழ் நடிகை ஆவார். 1940-களில் இவரது தாயார் வசுந்தராதேவி திரையுலகில் ஜொலித்தார். சென்னையில் உள்ள செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட் மற்றும் சர்ச் பார்க் ஆகிய பள்ளிகளில் வைஜெயந்தி தனது பள்ளிப் படிப்பை முடித்தார். வைஜெயந்திமாலா சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். வழுவூர் ராமைய்யா பிள்ளை இவர் பரதநாட்டிய குரு ஆவார். வைஜெயந்திமாலா சிறுவயதிலேயே கர்நாடக சங்கீதமும் பயின்றார். மனக்கல் சிவராஜா அய்யர் இவர் கர்நாடக சங்கீத குரு ஆவார்.

வைஜெயந்திமாலா தனது 13வது வயதிலேயே பரதநாட்டிய அரங்கேற்றதினை முடித்தார். பின்பு இந்திப்பட உலகில் நுழைந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்றார். சமன்லால் பாலி என்பவரை வைஜெயந்திமாலா மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். வைஜெயந்திமாலாவுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. தனது சுயசரிதையை வைஜெயந்திமாலா 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.  மக்களவை தேர்தலில் முதல் முறையாக வைஜெயந்திமாலா அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தென் சென்னை மக்களவை தொகுதிக்காக  போட்டியிட்டார். 1989-ல் மீண்டும் வைஜெயந்திமாலா தேர்தலில் போட்டியிட்டார். திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆலடி அருணா, வைஜெயந்திமாலாவை எதிர்த்து போட்டியிட்டார்.

இந்த தேர்தலிலும் வைஜெயந்திமாலா தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ஆலடி அருணாவை 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். 1993 ஆம் ஆண்டு வைஜெயந்திமாலா மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார். தென் இந்தியாவில் இருந்து இந்திப்பட  உலகில் நுழைந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை வைஜெயந்திமாலா ஆவார்.  ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வைஜெயந்திமாலா திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். கலைத் துறையில் வைஜெயந்திமாலா மிகச் சிறந்த சேவையாற்றியுள்ளார். வைஜெயந்திமாலா மிகச் சிறந்த பரதநாட்டிய கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞரும் மற்றும் இந்திய அரசியல்வாதியும் ஆவார்.  

Latest Slideshows

Leave a Reply