Physiotherapy Medical Center : இந்தியாவிலேயே முதல் முறையாக இயன்முறை மருத்துவ மையம்

மதுரையில் இயன்முறை மருத்துவம் மற்றும் அழகியல் மையத்தை திருநங்கை சோலு தொடங்கியுள்ளார் :

இதுவே இந்தியாவில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இயன்முறை மருத்துவம் மற்றும் அழகியல் மையம் (Physiotherapy Medical Center) ஆகும். தனிநபர்கள் உடல்நலம் பேணும் தொழில்களில் வாழ்நாள் முழுமையும், தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத்துறை இயன்முறை மருத்துவம் ஆகும்.

Physiotherapy Medical Center - இயன்முறை மருத்துவத்தின் சிறப்புகள் :

இந்த சுகாதாரத் தொழில் ஆனது உடல் நிலைகள் மற்றும் இயக்கக் குறைபாடுகளின் மதிப்பீடு, நோயறிதல் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்தும். இது உடலுக்கு எந்த பக்கவிளைவுகளையும் தராத ஒரு பக்க விளைவுகள் இல்லா மருத்துவம் ஆகும். நாகரீக வாழ்க்கை முறையால் நாம் இயற்கை மருத்துவ முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றை முற்றிலும் இழந்து விட்டோம். இதனால் நோய்கள் எளிதில் மனிதர்களை தாக்குகிறது. ஊனமுற்றவர்கள் ஆனாலும், கை, கால் இழந்தவர்கள் ஆனாலும், செயலிழப்பு ஆனவர்கள் ஆனாலும் தங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது மீண்டும் அவர்களின் வாழ்வை திரும்பப்பெற இந்த இயன்முறை மருத்துவம் சிறந்து விளங்குகிறது. அவர்களின் உடலை மீண்டும் இயக்க வைக்க மற்றும் முற்றிலும் குணமடைய  செய்ய சிகிச்சை அளிக்கப்படும்.

திருநங்கை சோலு - ஒரு குறிப்பு :

இயன்முறை மருத்துவம் படித்த திருநங்கை சோலு என்பவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் ஆவார்.  திருநங்கை சோலு 6 ஆண்டுகளாக செல்லம்பட்டியிலுள்ள வட்டார வள மையத்தில் சிறப்பு குழந்தைகள் பிரிவில், தற்காலிக இயன்முறை மருத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது தற்காலிக இயன்முறை மருத்துவ நிபுணர் பணி ஆனது நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாத நிலையில், இவர் ராலக்ஸ் என தனது தாயின் பெயரில் மதுரை அண்ணா நகர் பகுதியில் ஒரு இயன்முறை மருத்துவம் மற்றும் அழகியல் மையம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இயன்முறை மருத்துவரான திருநங்கை சோலு மக்களுக்கு பின்விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்காகவே MD மருத்துவம் படித்து வருகிறார். கஷ்டப்படும் திருநங்கைகளும் மற்றும் திருநம்பிகளும் சிகிச்சை பெறுவதற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெறுவதற்கும் இந்த மையத்தை (Physiotherapy Medical Center) தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். இயன்முறை சிகிச்சை சிறப்பு குழந்தைகளுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பல இடங்களில் திருநங்கை என்பதால் புறக்கணிக்கப்படுவதால் சிறிய அளவிலான தனது கிளினிக்கில் திருநங்கை சோலு  திருநங்கைகளுக்கான பணி வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply