Saamaniyan Movie Review: சாமானியன் திரைப்படத்தின் திரை விமர்சனம்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராமராஜன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் தற்போது சாமானியன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களுடன் (23.05.2024)அன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில், இப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

சாமானியன் படத்தின் மையக்கருத்து :

இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை பார்த்து சாமானியனுக்கு கோபம் வந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு வங்கி பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கொள்ளையடிக்க கும்பல் திட்டமிட்டுள்ளது. அப்போது ஒரு சாதாரண மனிதன் வங்கிக்குள் நுழைந்து மேலாளரை டைம் பாம் மற்றும் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டுகிறான். சாமானியன் வங்கியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் வங்கிக்குள் இருக்கும் அனைவரும் பயப்படுவார்கள். இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவர வங்கியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது ஊடகங்களுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. வங்கியையும் அங்குள்ள மக்களையும் மீட்க அந்த சாமானியன் வைக்கும் கோரிக்கை என்ன. சாமானியன் ஏன் வங்கியைக் கைப்பற்றினார் என்பதுதான் படத்தின் கதையாகும்.

சாமானியன் திரை விமர்சனம் (Saamaniyan Movie Review)

படம் மிகவும் நன்றாக இருந்தது, ராமராஜனுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு கம்பேக் படமாக இருக்கும். இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. முதல் பாதி மெதுவா ஆரம்பித்து இறுதியில் கிளைமாக்ஸ் காட்சி அதிரடியாக இருந்தது. வங்கியில் கடன் வாங்குபவர்கள் கவனமாக வாங்க அறிவுரை வழங்குகிறார்கள். மக்களிடம் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு ராமராஜன் ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார். ராமராஜன் படத்தின் கதையோடு நம்மையும் கதைக்குள் இழுத்தார் என்றே சொல்ல வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்ல செய்தியை இப்படம் கொடுத்துள்ளது. அதிகக் கடன் வாங்குவதால் ஏற்படும் பாதிப்பை நன்றாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். கண்டிப்பாக இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply