சாம்சங் நிறுவனம் Samsung Galaxy F15 5G ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி சிறப்பம்சம்கள் (Samsung Galaxy F15 5G Specifications)

  1. Samsung Galaxy F15 5G Display : இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் புல்எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகிறது. மேலும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (OS) இயங்குதள வசதியுடன் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. இந்த போனுக்கு 5 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  2. Samsung Galaxy F15 5G Camera : இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 60MB ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். இந்த F15 5G ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16MB கேமரா உதவியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி போன் விற்பனைக்கு வருகிறது.

  3. Samsung Galaxy F15 5G Storage : சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் 4GB RAM + 128GB மெமரி மற்றும் 6GB RAM + 128GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும்  வழங்கப்பட்டுள்ளது.

  4. Samsung Galaxy F15 5G Battery : 6000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும்  இந்த Galaxy F15 5G போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று   சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 60W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

  5. Samsung Galaxy F15 5G Rate : இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999/- என்ற குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply