Samsung Galaxy F15 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி Samsung Galaxy F15 எனும் புதிய ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 22-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்15 சிறப்பம்சங்கள் (Samsung Galaxy F15 Specifications) :
- Samsung Galaxy F15 Display : இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 போன் 6.6-இன்ச் (AMOLED) டிஸ்பிளே உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த ஆக்டோ கோர் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் வசதியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த Samsung Galaxy F15 ஸ்மார்ட்போனில் Mali-G57 MC2 GPU கிராபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Samsung Galaxy F15 Camera : இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 ஸ்மார்ட்போன் 50MB ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 32MB கேமரா உடன் இந்த சாம்சங் போன் அறிமுகமாகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
- Samsung Galaxy F15 Storage : இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM மற்றும் 256GB என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Samsung Galaxy F15 Battery : 6000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றி கவலை இருக்காது என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 50 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
- Samsung Galaxy F15 Rate : இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு கீழ் என்ற பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்