Vivo நிறுவனம் Vivo Y200E 5G ஸ்மார்ட்போனை பிப்ரவரி 22-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது

விவோ ஒய்200இ 5ஜி சிறப்பம்சங்கள் (Vivo Y200E 5G Specifications)

  1. Vivo Y200E 5G Phone Display : இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் 6.77 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதன் டிஸ்பிளேவில் 120Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.  ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

  2. Vivo Y200E 5G Phone Camera : இந்த விவோ ஒய்200இ 5ஜி போனில் 64MB  ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 32MB கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

  3. Vivo Y200E 5G Phone Storage : இந்த Vivo Y200E 5G ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

  4. Vivo Y200E 5G Phone Battery & Rate : இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது எனவும் விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. Vivo Y200E 5G இந்தியாவில் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,999/- என்ற விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.1000/- வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply