Skin Care Tips For Men : ஆண்கள் முகத்தை பராமரிக்க தேவையான வழிமுறைகள்

பொதுவாக, அழகான முகம் இருக்க வேண்டும் என்பது அனைவரின் யதார்த்த ஆசை. ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. பெண்கள் எப்படி அழகாக இருக்க விரும்புகிறார்களோ அதேபோல் ஆண்களும் அழகாக இருக்க விரும்புகிறார்கள். அழகைப் பொறுத்த வரையில், இவ்வளவு அழகு, அவ்வளவு அழகு என்றெல்லாம் அளவே அளவிட முடியாது. பெண்களைப் போல் ஆண்களுக்கு சருமத்தைப் பராமரிப்பதில் அதிகளவு ஆர்வம் காட்டுவதில்லை. சமூக ஊடகங்கள், இணையதளத்திலும் கூட, பெண்கள் சருமத்தை மேம்படுத்த உதவும் தோல் பராமரிப்பு குறிப்புகள் மட்டுமே  நிறைந்துள்ளன.

ஆண்களின் தோல் பராமரிப்பு குறிப்புகள் குறைவாகவே உள்ளன. பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக வெயிலில் சுற்றுவார்கள். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளும் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிக அளவில் ஏற்படும். சுற்றுசூழல் மாசுபாட்டால் ஏற்படும் சரும பிரச்சனைகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை பற்றி தற்போது காணலாம். ஒரே இரவில் உங்கள் முகத்தை அழகாக்குவதிலும், உங்கள் காதலியை கவர்வதிலும் இந்த அழகு குறிப்புகள் (Skin Care Tips For Men) முக்கிய பங்கு வகிக்கும்.

Skin Care Tips For Men - முகத்தை அழகாக மாற்றுவதற்கான வழிமுறைகள் :

க்ளன்சிங் செய்தல் :

உங்கள் முகத்தின் சருமம் மாசுபட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டும் அறிகுறிகளாக முகத்தில் சுருக்கம், வயதானது போன்ற தோற்றம், முகப்பரு போன்ற பிரச்சனைகள் தான் ஏற்படும். அப்போதே விழித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய சரும பிரச்சனைகள் அனைத்தையும் தடுக்க முதல் படியாக சருமத்தை ஆழமான சுத்திகரிப்பு செய்யும் முறை. இதைச் செய்ய, ஆக்டிவேட்டேடு சார்கோல் (கரி) சேர்த்து பேஸ்வாஷைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. இவை சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவும். அதுமட்டுமல்லாமல், பப்பாளி மற்றும் மாதுளையில் தயாரிக்கப்படும் தோல் பராமரிப்பு பொருட்களில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற வயதான தோற்றத்தை எதிர்ப்புப் போராடும் பண்பு உள்ளன. மேலும் சருமத்திற்கு நீரேற்றத்தை எளிதாகக் கிடைக்கச் செய்கிறது.

எக்ஸ்போலியேட் செய்தல் :

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நமது சருமத்தை குறிப்பிட்ட இடைவெளியில் எக்ஸ்போலியேட் செய்வது நல்லது. பேஸ் வாஷ் மூலம் முகத்தை சுத்தப்படுத்திய பிறகு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற எக்ஸ்போலியேட் செய்வதுதான் சிறந்தது. மேலும், இந்த முறை சருமத்தை பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. எக்ஸ்போலியேட் செய்யும் போது, ​​உங்கள் விரல்களால் வட்ட இயக்கத்தில் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். அதிகமாக அழுத்தி தேய்த்தால் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஆண்கள் தங்கள் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்த பிறகு, ஷேவ் செய்வது நல்லது. ஏனெனில் முகத்தில் உள்ள மயிர்க்கால்கள் தோலுரித்த பிறகு மென்மையாக மாறும். அந்த நேரத்தில் நீங்கள் எளிதாக ஷேவ் செய்யலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு உணவு மற்றும் தண்ணீர் :

நாம் உண்ணும் உணவுடன் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாக சேர்க்கவும். இவை நமது உடலின் ஆக்சிஜனேற்றத்தை மேம்படுத்தவும், சருமத்தில் உள்ள கொலாஜனை சுற்றுசூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கவும் (Skin Care Tips For Men) உதவுகின்றன. ஆரோக்கியமான சருமம் நீரேற்றமாக இருக்க வேண்டும். நம் உடலுக்கு நீர் எவ்வளவு இன்றியமையாததோ அதே அளவு தண்ணீர் நமது சருமத்திற்கும் இன்றியமையாதது. அதனால் நாம் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும்.

சருமத்துக்கு மாய்ஸ்சரைஸர் :

தோல் பராமரிப்பு என்று வரும்போது, ​​ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாய்ஸ்சரைஸர் அவசியம். எண்ணெய் பசை சருமம், வறண்ட சருமம், கலவையான சருமம் என அனைத்து சரும வகைகளும் மாய்ஸ்சரைஸரை பயன்படுத்தலாம். குறிப்பாக ஆண்கள் கட்டாயம் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் சற்று கரடுமுரடானதாகவும் வறண்டதாகவும் இருக்கும். எனவே மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க இது நல்லது. ஆனால் மாய்ஸ்சரைஸரைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் முகத்தை நன்கு கழுவுவது அவசியம்.

இயற்கை முறையில் சருமத்தை பாதுகாக்க :

ஒரே இரவில் மென்மையாக மாறி உங்கள் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கணுமா? அதற்கு இந்த டிப்ஸ் உதவும். துவரம் பருப்பை ஊற வைத்து அரைத்து, பின் அரிசி மாவு, அரைத்த ஆரஞ்சு பழ தோலை சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு, முல்தானி மட்டி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த அழகு குறிப்பு உங்கள் முகத்தை மிகவும் மென்மையாகவும், வெள்ளையாகவும் மாற்றும்.

Latest Slideshows

Leave a Reply