Sundar C About The Winner Film : வின்னர் படம் குறித்து பேசிய சுந்தர் சி

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் படம் எடுத்தேன் என இயக்குனர் சுந்தர் சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம் மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பல விமர்சனங்கள் இருந்தபோதிலும், சுந்தர் சி தொடர்ந்து கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். எந்தக் காட்சியில் எப்படி காமெடி, ரொமான்ஸ் போன்ற எமோஷன்கள் வொர்க் அவுட் ஆகும் எங்கு போர் அடிக்கும் என்று பார்வையாளர்களின் நாடித் துடிப்பு சுந்தர் சிக்கு நன்றாகவே தெரியும். அப்படி அவர் எடுத்த படங்களில் ஒன்றுதான் வின்னர். வின்னர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வடிவேலுவின் கைப்புள்ள கேரக்டர் தான். வின்னர் படத்தின் மேக்கிங் பற்றி சமீபத்தில் சுந்தர் சி பகிர்ந்து கொண்டார்.

Sundar C About The Winner Film :

வின்னர் படம் எடுத்ததற்காக காரணத்தை விளக்கிய சுந்தர் சி (Sundar C About The Winner Film) கூறியதாவது, எனது ஒரு படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கு சினிமா வாங்கிக்கிட்டாங்க. ஒரு படத்தின் உரிமையை வாங்கிய பிறகு, எனது மூன்று படங்களின் காட்சிகளை காப்பி செய்து படத்தைத் தயாரித்தனர். எனக்கு ரொம்ப கடுப்பாகிடுச்சு. நான் தெலுங்கு சினிமாவை பழிவாங்கும் நோக்கில் எடுத்த படம்தான் வின்னர். படத்தின் கதையை நான் பிரசாந்திடம் சொன்னபோது ஒரு 10 படங்களின் டிவிடியை அவரிடம் கொடுத்துவிட்டேன். எந்தெந்த படங்களில் எந்தெந்த சீன் எடுக்க போகிறோம் என்பதை அவரிடம்  தெளிவாக சொல்லிவிட்டேன்.

ஒரு காட்சியை அப்படியே படமாக்கினேன், ஒவ்வொரு காட்சியிலும் சிறிய மாற்றங்களைச் செய்தேன். அப்படி எடுத்த ஒரு சீன் தான் வடிவேலு கோலி குண்டுகளின் மேல் வழுக்கி விழும் காட்சி. இதே காட்சி தெலுங்கு படத்தில் ஹீரோ வாழைப்பழத்தில் வழுக்கி விழுவது போல இருந்தது. கொஞ்சம் மாற்றி இப்படி எடுத்தோம். வின்னர் படம் வெளியாகி சில நாட்கள் ஆன நிலையில், புதிய தெலுங்கு படத்தின் ப்ரோமோவை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன், வின்னர் படத்தின் அதே காட்சியை வைத்திருந்தனர். அப்போதுதான் உங்களைப் போல் என்னால் இருக்க முடியாது என்று என் தோல்வியை ஏற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply