The GOAT First Single : விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் முதல் பாடல் வெளியீடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் முதல் பாடல் (The GOAT First Single) ‘விசில் போடு’ வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுதி, தளபதி விஜய் பாடியுள்ளார்.
தி கோட் :
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘தி கோட்’ ஆகும். இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், பிரேம்ஜி, வைபவ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபரில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
The GOAT First Single :
இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தி கோட் படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ தற்போது (The GOAT First Single) வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இந்தப் பாடலைப் பாட, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தின் நான் ரெடி பாடல் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை குறித்தது. அதேபோல் இந்த முறையும் விசில் பாடல் வெளியாகியுள்ளது. ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா’ என்கிற முதல் வரியிலேயே விஜய்யின் அரசியல் பாடலில் பிரதிபலிக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் இந்தப் பாடலில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மூன்று நடிகர்களும் அற்புதமான நடனக் கலைஞர்கள் என்பதால் இந்தப் பாடலின் வீடியோ ரசிகர்களு விருந்தாக அமைந்துள்ளது.
இந்த பாடலில் விஜய்யை பார்க்காமல் வேறு லெவலில் ஆட்டம் போடுகிறார் பிரபுதேவா. அவருக்கு அடுத்தபடியாக விஜய் வெறித்தனமாக நடனமாடுகிறார் என்றால், நடன இயக்குனர் ராஜு சுந்தரம் மாஸ்டர் அவருக்கு அடுத்தபடியாக பிரசாந்தின் நிலையைப் பற்றி கொஞ்சம் யோசித்திருக்கலாம். இருப்பினும், பிரசாந்த் நல்லாவே டஃப் கொடுத்து விஜய் மற்றும் பிரபுதேவா ஆகியோருக்கு மேட்ச் செய்து ஆட்டத்தை வெளிப்படுத்துவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அப்படிப்பட்ட மூன்று மல்டி ஸ்டார்களை ஒரே பிரேமில் கொண்டு வந்து மக்களிடம் காட்டியுள்ளார் வெங்கட் பிரபு. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?