TN Govt's Special Schemes For Women : தமிழக அரசின் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள்

TN Govt's Special Schemes For Women - சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார் :

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மகளிர் நலனை மேம்படுத்தும் வகையில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் (TN Govt’s Special Schemes For Women) செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

● பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டம் :

தமிழக அரசு ஆனது ரூபாய் 2 கோடி செலவில் 200 பிங் ஆட்டோக்கள் இயக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு  பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்க அரசு மானியமாக தலா ரூபாய் 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிங்க் ஆட்டோ வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

● சுயதொழில் செய்ய மானியம் வழங்கும் திட்டம் :

ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்கள் என பெண்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 200 பெண்களுக்கு சுயதொழில் செய்ய தலா ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் மானியம் ஆனது வழங்கப்படும்.

● அரசு மகளிர் விடுதிகள் சீரமைக்கும் திட்டம் :

ஒரு கோடி ரூபாய் செலவில் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மகளிர் விடுதிகள் சீரமைக்கப்படும். அடையாறு (சென்னை), தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய 7 இடங்களில் விடுதிகளை புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு பணிகள் ரூ.4.21 கோடி திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகளிர் விடுதிகள் மற்றும் தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் ஆகியவற்றின் பதிவு மற்றும் உரிமம் பெறும் நடைமுறைகள் ஆனது எளிதாக்கப்படும்.

● தோழி விடுதிகள் அமைக்கும் திட்டம் :

சொந்த ஊரை விட்டு பணி நிமித்தம் காரணமாக வெளியூருக்கு வரும் பெண்கள் குறைந்த செலவில், வசதியாக மற்றும் பாதுகாப்பாக தங்க வழி செய்யும் வகையில் தமிழக அரசால் தோழி விடுதிகள் திட்டம் ஆனது கொண்டுவரப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆனது தோழி தங்கும் விடுதிகளை அமைத்து வருகிறது. செயின்ட் தாமஸ் மவுண்ட் (செங்கல்பட்டு),  திருவண்ணாமலை மற்றும் ஓசூர் ஆகிய 3 இடங்களில் ரூ.35.86 கோடி செலவில் மகளிர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் கூடுவாஞ்சேரி, திருச்சி மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் ரூ.31.07 கோடி செலவில் மகளிர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

● மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் :

பெண்களின் சுயமரியாதையைக் காக்க மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்க மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். தமிழக அரசு நடத்தும் பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம்.

● விடியல் பயணம் திட்டம் :

இலவசமாக பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் (TN Govt’s Special Schemes For Women) அறிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply