TN Police Recruitment 2024 : தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழக காவல்துறையின் சுருக்கெழுத்து பணியகத்தில் காலியாக உள்ள இளநிலை நிருபர் பணியிடங்கள் (TN Police Recruitment 2024) நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Police Recruitment 2024
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
- தமிழக காவல் துறையில் சுருக்கெழுத்து பணியகத்தில் காலியாக உள்ள Junior Reporter பணியிடங்களுக்கு மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித் தகுதி (Educational Qualification)
- இந்த Junior Reporter பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வயதுத் தகுதி (Age)
இந்த Junior Reporter பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று வரை 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. சம்பளம் (Salary)
தமிழக காவல் துறையில் இந்த Junior Reporter பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 36,200 முதல் ரூ. 1,14,800 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த Junior Reporter பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
6. விண்ணப்பிக்கும் முறை (Application Process)
- இந்த Junior Reporter பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்
- https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை முதலில் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் The Honorable Chairman, Police Selection Committee, HQ 2nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004. என்ற முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
7. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
இந்த Junior Reporter பணியிடங்களுக்கு 15.04.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
8. மேலும் விவரங்களுக்கு:
https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
- Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
- Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
- Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
- RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
- Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
- Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
- Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
- Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
- SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்