TN Village Assistant Recruitment 2024 : தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் பிரிவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை (TN Village Assistant Recruitment 2024) உடனடியாக நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் கிராமங்களின் அதிகாரிகளாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களின் கீழ் கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வரி வசூல், கிராம கணக்கு மேலாண்மை, நில வருவாய் ஆவணங்கள் தயாரித்தல், கணக்குகளை தொடர்ந்து பராமரித்தல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளைத் தயாரித்து புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் (Village Assistant) இடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்தப் பணியிடங்களை (TN Village Assistant Recruitment 2024) உடனடியாக நிரப்ப தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளது.

TN Village Assistant Recruitment 2024 - பணியிட விவரங்கள் :

  • பணியிடம் : கிராம உதவியாளர்

  • காலியிடங்கள் : 2,299

  • பணிக்கான தகுதிகள் : இந்த பணிக்கு (TN Village Assistant Recruitment 2024) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இருதாரமணம் இருக்கக் கூடாது. காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட கிராமம் அல்லது தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • வயது வரம்பு : விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பாக பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட/மிகப் பிற்படுத்தப்பட்ட/முஸ்லிம்கள் 21 முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ ST/ அருந்ததியர் ஆகியோர் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

  • சம்பளம் :  ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை

  • தேர்வு முறை : இந்த பணிக்கு நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி மற்றும் இதர சான்றுகள் சரிபார்க்கப்படும். தகுதியானவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.   

  • விண்ணப்பிக்கும் முறை : கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிடும். மேலும், விவரங்களுக்கு தமிழக அரசின் https://www.tn.gov.in, வருவாய் நிர்வாகத் துறை இணையதளம் https://cra.tn.gov.in மற்றும் அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply