TNMAWS Recruitment 2024: மாதம் ரூ.1,30,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

தமிழக நகராட்சி நிர்வாகத்தில் காலியாக உள்ள ‘Sanitary Inspector’ பதவிக்கு வேலைவாய்ப்பு (TNMAWS Recruitment 2024) அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

TNMAWS Recruitment 2024 - பணியிட விவரங்கள் :

  • பணி : Sanitary Inspector (Corporation & Municipality)

  • காலிப்பணியிடங்கள் : 244

  • தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் (TNMAWS Recruitment 2024) விண்ணப்பத்தார்கள் வேதியியல், விலங்கியல் பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் அறிவியல், நுண்ணுயிரியல், உயிர்வேதியியல் ஆகிய பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட கல்வித்தகுதியுடன் தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற Sanitary Inspector படிப்பை முடித்திருக்க வேண்டும். 

  • வயது வரம்பு : இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 1.7.2024 தேதியின்படி பொது பிரிவினர்கள் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவினர்களுக்கு வயது தளர்வுகள் அளிக்கப்படும்.

  • மாத சம்பளம் : இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை வழங்கப்படும்.  

  • தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வானது தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறும்.

  • எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 26.6.2024 மற்றும் 30.6.2024 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

  • விண்ணப்பிக்கும் முறை : இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 12/03/2024.

Latest Slideshows

Leave a Reply