World Cup Schedule - Platform Tamil

World Cup Schedule: உலக கோப்பை அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட போகிறதா?

உலகக் கோப்பை தொடர் :

உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்திய அணி கடந்த 10 வருட காலமாக ஐசிசி போட்டிகளில் பெரிதாக ஒன்றும் ஜொலிக்கவில்லை. இதனால் இந்த வருடம் நிச்சயம் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சிறிது நாட்களுக்கு முன்பு ஐசிசி World Cup Schedule வெளியிட்டது. நிறைய பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த உலகக்கோப்பை அட்டவணையை தயார் செய்து வெளியிட்டது.

ஏற்கனவே ஆசிய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் போட்டியை இலங்கைக்கு மாற்றியது. இதனால் பாகிஸ்தானை உலக கோப்பை தொடருக்கு இந்தியாவில் விளையாடாது என்று தகவலை தெரிவித்து இருந்தது. இதனால் ஒரு வழியாக பிரச்சனையை முடித்து பாகிஸ்தான் அணியை இந்தியாவில் விளையாட வைத்துள்ளது ஐசிசி. இந்த நிலையில் உலககோப்பை அட்டவணையை மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வருடம் நவம்பர் 12ம் தேதி கொல்கத்தாவில் திருவிழா நடைபெற உள்ளதால் அன்று நடைபெற இருந்த பாகிஸ்தான் போட்டி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் விளையாட உள்ளது.

இந்திய அணி மொத்தமாக உள்ள ஒன்பது மைதானங்களிலும் விளையாட உள்ளதால் ஏற்கனவே சீனியர் பிளேயர் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒவ்வொரு போட்டிக்கும் பயணம் செய்து விளையாடுவதால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும் என்கின்றனர். இந்த உலகக் கோப்பை அட்டவணை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். அகமதாபாத்தில் நவராத்திரி திருவிழா நடைபெற உள்ளதால் அந்த நாளில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி பாதுகாப்பு பிரச்சினை காரணமாக தேதி மாற்றப்பட உள்ளது. இதேபோன்று அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடைபெற இருந்த போட்டி அக்டோபர் மாதம் பத்தாம் தேதிக்கு மாற்றப்பட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளையும் மாற்றி அமைத்து ஐசிசி புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது.

World Cup Schedule - அட்டவணையில் மீண்டும் மாற்றமா? :

இந்த நிலையில் மீண்டும் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்திற்கு காவல்துறையினர் கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்திற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மீண்டும் World Cup Schedule மாற்றம் செய்யப்பட உள்ளதால் மூன்றாவது முறையாக அட்டவணையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் இதுவரை எழுந்துள்ளன.

Latest Slideshows

Leave a Reply