World's First 3D Tablet : உலகின் முதல் 3D டேப்லெட் சாதனத்தை நுபியா (Nubia) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

நுபியா (Nubia) நிறுவனம் உலகத்தின் முதல் 3D டிஸ்பிளே (World’s First 3D Tablet) வடிவமைப்பை கொண்ட Nubia Pad 3D II டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உலகத்தின் முதல் 5G + AI சிறப்பம்சம் கொண்ட கிளாஸ் ஃபிரீ 3D டிஸ்பிளேவாகும். அன்று முதல் இன்று வரை உலகளவில் எப்போதுமே 3D திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 3D படங்கள் என்று சொல்லும் பொழுது அவதார் திரைப்படத்தை நம்மால் நினைத்து பார்க்காமல் இருக்க முடியாது. அவதார் 1 பிறகு அவதார் 2 என்று வரிசையாக ரிலீசான திரைப்பட வரிசையில் தற்போது விரைவில் அவதார் 3 கூட இணையவுள்ளது. இந்த அவதார் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

World's First 3D Tablet - Nubia Pad 3D II டேப்லெட் :

3D அனுபவம் அதிகமாக மக்களை கவர்ந்திழுக்கும் காரணத்தினால் சில எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் 3D தொலைக்காட்சிகளை இதற்கு முன்பு அறிமுகம் செய்தனர். அதுவும் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதற்கு அடுத்தபடியாக நுபியா நிறுவனம் 3D டிஸ்பிளேவை ஆதரிக்கும் Nubia Pad 3D II டேப்லெட் சாதனத்தை (World’s First 3D Tablet) அறிமுகம் செய்துள்ளது.

3D கண்ணாடி தேவையில்லை :

இந்த Nubia Pad 3D II டேப்லெட் சாதனத்துக்கு 3D கண்ணாடிகள் தேவைப்படாத முழுமையான 3D டிஸ்பிளேவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய டேப்லெட் சாதனம் பற்றிய முழு விபரங்களை பார்க்கலாம். இந்த புதிய நுபியா பேட் 3D டேப்லெட் சாதனம் உலகின் முதல் 5G + AI அம்சம் கொண்ட கிளாஸ் ஃபிரீ 3D டிஸ்பிளேயுடன் (World’s First 3D Tablet) வெளிவந்துள்ளது. இதற்கு முந்தைய வெர்ஷன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் வெளிவந்தது. ஆனால் தற்போது புதிய நுபியா பேட் 3D II மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் வெளிவந்துள்ளது என்று நுபியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Nubia Pad 3D II டேப்லெட் சிறப்பம்சம் :

Nubia Pad 3D II Display : இந்த Nubia Pad 3D II  டேப்லெட் AI உதவியுடன் பிக்ச்சர், வீடியோஸ், ஸ்ட்ரீமிங் மீடியா உட்பட மற்றும் கேம்களை கூட 3D ஆக மாற்றி சிறந்த விஷுவல் அனுபவத்தை வழங்கும் என்று நுபியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனம் 12.1″ இன்ச் அளவு கொண்ட IPS LCD உடன் 2,560 x 1,600 பிக்சல் கொண்ட 144Hz ரெஃப்ரஷ் ரேட் கிரிஸ்டல் லென்ஸ் டிஸ்பிளேவை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 3D தெளிவுத்திறனில் 80% அதிகரிப்பு மற்றும் 3D பயன்முறையில் பிரகாசத்தை இரட்டிப்பாக்கும் என்று நுபியா நிறுவனம் உறுதியளிக்கிறது.

மேலும் இது 3D க்ரோஸ்டாக்கைக் குறைத்து 3D நிறங்கள் மற்றும் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தி 3D அனுபவத்தை சிறப்படைய செய்கிறது. மேலும் இந்த 3D டிஸ்ப்ளே 86° பார்க்கும் கோணத்தை வழங்குகிறது. இதனால் பல நபர்களை ஒரே நேரத்தில் பார்க்க அனுமதிக்கிறது. மேலும் இது நேச்சர் மற்றும் எந்தவிதமான உருவப்படமாக இருந்தாலும் அதை 3D ஆக மாற்றி வீடியோவில் காண்பிக்கிறது. இந்த Nubia Pad 3D II டேப்லெட் LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் விற்பனைக்கு வருகிறது. இது 13MP டூயல் ரியர் கேமராவுடன் முன்பக்கத்தில் 8MP டூயல் கேமராவை கொண்டுள்ளது. இது 10,000mAh பேட்டரி உடன் 66W பாஸ்ட் சார்ஜ்ஜிங் ஆதரவுடன் விற்பனைக்கு வருகிறது.

Latest Slideshows

Leave a Reply