Gaganyaan Project Update : ககன்யான் திட்டத்தில் 4 ஆண் வீரர்களுக்கு துணையாக பெண் ரோபோ 'வியோமித்திரா' அனுப்பப்படுகிறது

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ‘ககன்யான்’ (Gaganyaan) திட்டம் தற்போது முழுவீச்சில் வேகமாக முன்னேறி (Gaganyaan Project Update)  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வியோமித்திரா (Vyommitra) :

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக ஒரு சோதனை முயற்சியாக “வியோமித்திரா” என்ற பெண் ரோபோவை  விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக இஸ்ரோ (Gaganyaan Project Update) அறிவித்துள்ளது. இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என சமீபத்தில் இஸ்ரோ தெரிவித்தது. இதில் 4 வீரர்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார்.

பெண் ரோபோ :

இந்த 4 விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு நலன் கருதி இஸ்ரோ 2 சோதனை ஓட்டங்களை நிகழ்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் முதல் சோதனை ஓட்டத்தின் போது காலி விண்கலத்தை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இதனை தொடர்ந்து நடத்தப்படும் இரண்டாம் சோதனை ஓட்டத்தில் இஸ்ரோ ‘வியோமித்திரா’ என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

4 விண்வெளி வீரர்கள் :

இதற்கு அடுத்து இறுதியாக 4 விண்வெளி வீரர்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. இந்த ‘ககன்யான்’ திட்டமான இந்தியா அதன் சொந்த முயற்சியில் உருவாக்கி வருகிறது.  ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனையானது விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இந்த திட்டத்தில் இஸ்ரோவின் பெண் ரோபோட் (Female Humanoid Robot) முக்கிய பங்கு வகிக்கும் என இஸ்ரோ கூறியுள்ளது. இந்த வியோமித்ரா என்ற பெயருக்கு என்ன பொருள் என்று பார்க்கும்போது வியோமித்ரா என்பது வியோமா (விண்வெளி) மற்றும் மித்ரா (நண்பர்) என்ற இரண்டு பெயர்களின் கலவையுடன் வருகிறது. மேலும் இதுவொரு சமஸ்கிருத வார்த்தையாகும்.

எச்சரிக்கும் வியோமித்ரா பெண் ரோபோ :

இந்த பெண் ரோபோட் வியோமித்ரா கடந்த 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இஸ்ரோ திட்டமிட்டுள்ள ககன்யான்  திட்டத்தில் ஏதேனும் எதிர்பாராத விதமாக இடர்கள் ஏற்பட்டால் அதை உடனே எச்சரிக்கும் வகையில் சுவிட்ச் பேனல் செயல்பாடுகளை இது கட்டுப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இந்த பெண் ரோபோ 4 விண்வெளி வீரர்களுக்கு ஒரு துணையாகவும் இருக்குமென்று இஸ்ரோ கூறியுள்ளது.

ISRO-வின் முதல் மனித உருவ ஹியூமனாய்டு :

விண்வெளியில் வீரர்கள் தனிமையை அதிகமாக உணர்வார்கள் என்பதனால் அவர்களின் மனநிலையை பலப்படுத்த தேவையான உரையாடல்களை இந்த பெண் ரோபோட் செய்யுமென்று இஸ்ரோ கூறியுள்ளது. விண்வெளி பயணத்தின் பொழுது வீரர்கள் கேட்கும் அனைத்து  விதமான  கேள்விகளுக்கும் இந்த ரோபோட் பதில் அளிக்கும். இந்த “ஹியூமனாய்டு ரோபோட்” என்பது இஸ்ரோ உருவாக்கும் முதல் மனித உருவ ரோபோவாகும்.

Gaganyaan Project Update - ககன்யான் திட்டம் 3 நாள் பயணம் :

இந்த ககன்யான் திட்டத்தின் முக்கிய நோக்கம் 4 விண்வெளி வீரர்களை மூன்று நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்புவதாகும். இந்த பெண் ரோபோட் விண்வெளிக்கு செல்லவிருக்கும் 4 விண்வெளி வீரர்களுடன் 3 நாள் பயணம் செய்யவுள்ளது என்றும் தகவல்கள் தற்போது  (Gaganyaan Project Update) வெளியாகியுள்ளன. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்புவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோளாக இருக்கிறது. இந்த விண்வெளி பயணம் சுமார் 400 கிமீ சுற்றுவட்டப்பாதையில் விண்வெளியில் இந்த பயணம் நிகழும் என்று இஸ்ரோ கூறியுள்ளது. விண்வெளிக்கு அனுப்பும் இந்திய வீரர்களை மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரவும் இஸ்ரோ ஒரு திட்டத்தை சரியாக வகுத்துள்ளது. 4 வீரர்களும் பத்திரமாக இந்திய பெருங்கடல் நீரில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply