இஸ்ரோ Mangalyaan-2 பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது

Mangalyaan-2 :

சந்திராயன் 4 திட்டம் தொடர்பான சுவாரசியமான தகவல்கள் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து தற்போது இஸ்ரோவின் மற்றொரு கனவு திட்டமான மங்கள்யான்-2 (Mangalyaan-2) என்ற செவ்வாய் கிரக திட்டம் (Mars Planet Mission) பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்தியா அடுத்த செவ்வாய் கிரக (Mangalyaan-2) பயணத்தின் போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) இந்த முறை ஒரு புதிய ஹெலிகாப்டர் பெலோட் சாதனத்தை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் நாசா (NASA) விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் பயணத்தின் போது அனுப்பிய “இன்கேன்னுகிட்டி” (Ingenuity) போன்ற ட்ரோன் சாதனத்தை இஸ்ரோ அனுப்பவுள்ளது.

செவ்வாய் திட்டம் :

இஸ்ரோ (ISRO) தற்போது ககன்யான் திட்டம் மற்றும் சந்திரயான்-4 திட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த வரிசையில் இஸ்ரோ செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கும் இந்தியாவின் 2வது திட்டத்தை வரும் 2030 ஆண்டில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை இஸ்ரோ இப்போதிலிருந்தே திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மங்கள்யான் (Mangalyaan) :

சிவப்பு கிரகம் அல்லது ரெட் பிளானட் என்று அழைக்கப்படும் மார்ஸ் (Mars) கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமான “மங்கள்யான்” (Mangalyaan) என்ற பெயருடன் இஸ்ரோவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (MOM) கடந்த நவம்பர் 2013-ல் விண்வெளி நோக்கி ஏவப்பட்டது. இது செப்டம்பர் 2014-ல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது.

ஹெலிகாப்டர் டிரோன் :

இந்த மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் விண்கலம் எட்டு ஆண்டுகளுக்கு சிவப்பு கிரகத்தைச் சுற்றி சுற்றுப்பாதையில் சுற்றி வந்து கிரகத்தை பற்றிய பல ஆராய்ச்சியை மேற்கொண்டது. இறுதியில் கடந்த 2022-ல் இந்த ஆர்பிட்டர்யுடன் இருந்த தொடர்பை இஸ்ரோ இழந்தது. ஆனாலும் இந்த திட்டம் வெற்றியடைந்தது என்று கூறப்பட்டது. அடுத்தபடியாக எதிர்கால செவ்வாய் கிரக திட்டத்தில் (Mangalyaan-2) இஸ்ரோ ஒரு டிரோன் ஹெலிகாப்டரை அனுப்ப திட்டமிட்டுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி ஜெயதேவ் பிரதீப் அவர்கள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ள ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் வான்வழி ஆய்வுக்கான பேலோடுகளின் தொகுப்பை எடுத்துச் செல்லும் என்று சமீபத்திய கலந்தாய்வில் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஹெலிகாப்டர் ட்ரோனுக்கான திட்டமிடப்பட்ட அறிவியல் பேலோடுகளில் வெப்பநிலை சென்சார் மற்றும் ஈரப்பதம் சென்சார், பிரஷர் சென்சார் போன்றவை இடம்பெறும். நாசா உருவாக்கிய “இன்கேன்னுகிட்டி” (Ingenuity) ஹெலிகாப்டர் செவ்வாயில் என்ன செய்ததோ அதைப்போலவே செவ்வாய் கிரகத்தின் காற்றின் வேக சென்சார் மற்றும் எலக்ட்ரிக் ஃபீல்ட் சென்சார் மற்றும் டஸ்ட் ஏரோசோல்களின் அளவை அளவிடும் சென்சார் போன்றவை இதில் இருக்கும். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை விவரிப்பதற்காக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 328 அடி (100 மீட்டர்) உயரம் வரை பறக்கும் திறன் கொண்டதாக இந்த ஹெலிகாப்டர் டிரோன் திகழும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply