A Rare Solar Eclipse on April 8, 2024 : ஏப்ரல் 8, 2024 அன்று அரிய சூரிய கிரகணம் அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை...! இந்தியாவில் தெரியுமா?

வரும் ஏப்ரல் 8, 2024 அன்று முழு சூரிய கிரகண நிகழ்வு (A Rare Solar Eclipse on April 8, 2024) நடைபெற உள்ளது. இது மற்ற சூரிய கிரகணத்தை விட  ஒரு அரிய கிரகண நிகழ்வாகும். இந்த அரிய சூரிய கிரகண நிகழ்வானது அமெரிக்கா, வட அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ பகுதிகளில் நிகழ்கிறது. இருப்பினும் இது இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த வகையான கிரகணம் மிகவும் அரிதானது. இந்த முழு சூரிய கிரகணம்  ஏப்ரல், 8, 2024 அன்று மதியம் 2:12 மணிக்கு தொடங்கி  மறுநாள் அதிகாலை 2.22 வரை நீடிக்கும் என கூறியுள்ளனர்.

முழு சூரிய கிரகணம் : A Rare Solar Eclipse on April 8, 2024

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே  சந்திரன் செல்லும் போது சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து பூமியின் மீது நிழல் படும் பொழுது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். இந்நிகழ்வில் நிலவு மற்றும் சூரியனின் ஒளி பூமியின் சில பகுதிகளில்  விழுவதைத் தடுக்கிறது. முழு சூரிய கிரகணத்தின் போது சிலப் பகுதிகளில்  சூரிய ஒளி படாமல் அடர்ந்த இருள் ஏற்படும். 

பள்ளிகளுக்கு விடுமுறை:

வரும் ஏப்ரல் 8 தேதி  ஏற்படும் இந்த அரிய முழு சூரிய கிரகண நிகழ்வு (A Rare Solar Eclipse on April 8, 2024) வட அமெரிக்கா உள்பட சில பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவின் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக பல பள்ளிகள் அன்று விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு சூரிய கிரகணம் நியூயார்க், டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி,  வெர்மான்ட், இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, இந்தியானா, ஓஹியோ, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மைனே ஆகிய மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நிபுணர்களின் கூற்றுப்படி  இந்த சூரிய கிரகணம் சூரிய மின் உற்பத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் கடந்த  ஏழு ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் ஏற்படும் இரண்டாவது சூரிய கிரகணம் இதுவாகும். இத்தகைய நிகழ்வுகள் மிகவும் சாதாரணமானவை என்றாலும் அவை மின்சார வாகன அமைப்பு  ஆபரேட்டர்களுக்கு  ஒரு  தனித்துவமான சிக்கலை ஏற்படுத்துகின்றன.

Latest Slideshows

Leave a Reply