ISRO Successfully Launched Pushpak Rocket : PUSHPAK என்ற SUV ரியூசபிள் ராக்கெட் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

இஸ்ரோ (ISRO) நேற்று புஷ்பக் (PUSHPAK) என்ற SUV கார் சைஸ் அளவே ஆன ரியூசபிள் ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை (ISRO Successfully Launched Pushpak Rocket) செய்து முடித்துள்ளது. இஸ்ரோ மீண்டும் ஒரு மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை நாசா (NASA) ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) போன்ற நிறுவனங்கள் வியந்து திரும்பி பார்த்துள்ளன. புஷ்பக் விமான சோதனை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

புஷ்பக் (PUSHPAK) என்று அழைக்கப்படும் விமான ராக்கெட்டை கொண்ட வாகனம் இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் நடுவானில் 4.5 கி.மீ உயரத்தில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள ஓடுபாதையில் இருந்து 4 கி.மீ தொலைவில் நடு வானில் விடுவிக்கப்பட்ட புஷ்பக் கிராஸ் ரேஞ்ச் திருத்தங்களுடன் ஓடுபாதையை அணுகியது. எதிர்பார்த்ததை விட மிகவும் துல்லியமாக இந்த புஷ்பக்  ராக்கெட் (ISRO Successfully Launched Pushpak Rocket) தரையிறங்கியது. இந்த புஷ்பக் சோதனை புஷ்பக்கின் மூன்றாவது விமான சோதனையாகும். இது மிகவும் சிக்கலான சூழ்நிலைகளில் அதன் ரோபோ தரையிறங்கும் திறனை சோதிக்கும் ஒரு பகுதியாக சோதனை செய்யப்பட்ட மிக முக்கியமான சோதனையாகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சோதனை முயற்சியில் பல விஷயங்களை இஸ்ரோ ஒரே நேரத்தில் சோதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ISRO Successfully Launched Pushpak Rocket :

நடு வானில் ஹெலிகாப்டர் மூலம் விடுவிக்கப்பட்ட புஷ்பக் அதன் ரோபோ திறனை பயன்படுத்தி மிகவும் துல்லியமாக இறங்குதளத்தில் சரியான வேகத்துடன் சரியான கிராஸ் ரேஞ் திறனுடன் தரையிறங்கியது. இந்த சோதனை உடன் புஷ்பக் ராக்கெட் உடைய பிரேக் பாராசூட் மற்றும்  லேண்டிங் கியர் பிரேக்குகள் மற்றும் நோஸ் சக்கர ஸ்டீயரிங் சிஸ்டம் ஆகியவையும் சேர்த்து பயன்படுத்தி லேண்டிங் செய்யப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

RVL LEX-1 ராக்கெட் :

  • இஸ்ரோவின் முதலாவது RVL 2016 ராக்கெட் சோதனை முதல் முறையாக பறந்து வங்காள விரிகுடாவில் ஒரு மெய்நிகர் ஓடுபாதையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
  • திட்டமிட்டபடி கடலில் மூழ்கியதால் அந்த ராக்கெட் மீட்கப்படவில்லை. இரண்டாவது RVL LEX-1 சோதனை 2023 இல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

RVL LEX-2 புஷ்பக் :

  • இந்த RVL LEX-2 ராக்கெட்டில் இருந்த முக்கியமான பாகங்களை இஸ்ரோ இப்போது மீண்டும் புஷ்பக் விமானத்தில் ரீயூஸ் செய்துள்ளது. இந்த முறை நடத்தப்பட்ட சோதனையில் ராக்கெட் ரியூசபிள் பாகங்களுடன் வெற்றிகரமாக தரையிறக்கி புதிய சாதனையை படைத்துள்ளது.
  • ரியூசபிள் ராக்கெட் ஐடியாவை முதன் முதலில் நிஜமாக்கியவர் எலான் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியூசபிள் ராக்கெட் :

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ரியூசபிள் ராக்கெட்களை பயன்படுத்தி விண்வெளி பயண செலவை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் இப்போது இந்தியா கண்டுள்ள வெற்றி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. உலக நாடுகளின் கவனத்தையும் இப்போது இந்தியா அதிகமாக ஈர்த்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply