Akasa Air Commences International Operations : Akasa Air நிறுவனம் தனது international operations-ஐ தொடங்கியது
ஆகாசா ஏர் நிறுவனம் ஆனது தொடங்கப்பட்ட 19 மாதங்களில் சாதனை படைத்துள்ளது. கத்தாருக்கான தனது செயல்பாடுகளைத் தொடங்குவதன் மூலம் ஏர் நிறுவனம் தொடங்கப்பட்ட 19 மாதங்களில் வெளிநாடுகளுக்கு பறந்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை ஆகாசா ஏர் நிறுவனம் பெற்றுள்ளது. ஆகாசா ஏர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே, “ஆகாசா ஏர் மார்ச் 28 முதல் தோஹாவிற்கு விமான சேவைகளுடன் தனது சர்வதேச செயல்பாடுகளைத் (Akasa Air Commences International Operations ) தொடங்குகிறது. தோஹா கத்தாரின் தலைநகர், வணிக மையம் மற்றும் முக்கிய பொருளாதார இயந்திர நகரம் ஆகும்.
ஒவ்வொரு வாரமும் மும்பையை தோஹாவுடன் இணைக்கும் நான்கு விமானங்களை ஆகாசா ஏர் இயக்கும். இது கத்தார் மற்றும் இந்தியா இடையேயான விமான இணைப்பை மேம்படுத்தும். இந்திய வர்த்தக மையமான மும்பையுடன் நேரடியாக இணைக்கப்படுவதால், இரு நாடுகளிலிருந்தும் பலதரப்பட்ட பயணிகளுக்கு வசதியாக, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை இந்த விமானங்கள் வலுப்படுத்தும். இதன் மூலம் எங்கள் சர்வதேச செயல்பாடுகளை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நம்பகத்தன்மை, சேவைத் திறன் மற்றும் உலகளாவிய விமானப் போக்குவரத்தில் உயர்ந்த பாதுகாப்புத் தரங்களின் உறுதியான அடித்தளத்தின் மீது ஆகாசா ஏர் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த கத்தாருக்கான பயணம் ஆனது எங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியைக் குறிக்கிறது. உலகின் தலைசிறந்த 30 விமான நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கான எங்கள் பயணம் ஆனது தொடரும்.” என்று தெரிவித்துள்ளார். புதிய விமானப் பாதையானது கத்தாரில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் இந்தியர்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு பயண மாற்றை வழங்கியுள்ளது.
இப்போது இந்த ஆகாசா ஏர் விமானங்களுக்கான முன்பதிவுகள் ஆனது அகசா ஏரின் இணையதளமான ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆப்ஸ் மற்றும் பல முன்னணி OTA-கள் மூலம் திறக்கப்பட்டுள்ளன. குறைந்த விமான கட்டணமாக திரும்பும் கட்டணம் ஆனது INR 29, 012 இல் தொடங்குகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் மத்திய கிழக்கிலும் வேகமாக வளரும் நோக்கத்துடன் கத்தாருக்கான செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2022 இல் தனது பறக்கும் பயணத்தை தொடங்கிய ஆகாசா ஏர் விமான நிறுவனம், தற்போது 23 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்குகிறது.
Latest Slideshows
-
World Heritage Sites in 2024: அதிக உலக பாரம்பரிய தளங்கள் உள்ள நாடுகள் பட்டியல்
-
Powerful Solar Storm: பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த காந்த புயல் !
-
Drones To Monitor Pakistan : பாகிஸ்தானை கண்காணிக்க பதிண்டா தளத்தில் ஆளில்லா விமானங்கள்
-
Speedy Growth Of Chennai Real Estate In 2024 : 2024ல் சென்னை ரியல் எஸ்டேட்டின் வேகமாக வளர்ச்சிக்கு அச்சாரமாக உள்ள இடங்கள்
-
Samsung Galaxy F55 5G Launch : Samsung Galaxy F55 5G - மே 17 அன்று அறிமுகம்
-
மும்பையில் 3,50,000 சதுர அடி கூட்டு கட்டுமானம் - Siroya Corp Development Plan
-
Chennai Real Estate Development : பெரிய முதலீட்டாளர்களின் நுழைவை அறிவித்தது
-
Founder Adani's Success Story : Adani Group Founder & Chairman திரு.அதானியின் வெற்றிக் கதை
-
Steel Cutting Ceremony Of Cadet Training Ship : காட்டுப்பள்ளியில் 3rd Cadet-Training Ship-ன் Steel-Cutting Ceremony
-
வேலை மாறினால் PF பணம் தானாக மாற்றப்படும் - New EPFO Rule