Self Baggage Drop Facility launch at Chennai Airport : சென்னை விமான நிலையம் Self Baggage Drop Facility-யை தொடங்க உள்ளது

சென்னை விமான நிலையத்தில் Self-baggage drop kiosks-கள் (Self Baggage Drop Facility launch)  நிறுவப்பட்டுள்ளதால்,  இனி மேல் உள்நாட்டு விமானப் பயணிகள் தங்களது செக்-இன் பேக்கேஜை இறக்கி வைக்க  நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. விமானப் பயணிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய வகையில் இந்த வசதியை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இப்போது சென்னை விமான நிலையத்தில்  T1 மற்றும் T4  என்ற இரண்டு உள்நாட்டு முனையங்கள் செயல்படுகின்றன. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆனது உள்நாட்டு விமானச் செயல்பாடுகளில் பெரும்பாலானவற்றை  கையாளும் T1 முனையத்தில் எட்டு Self-baggage drop kiosks-களை நிறுவியுள்ளது. T4 முனையத்தில்  சில மாதங்களுக்குப் பிறகு 10 Self-baggage drop kiosks-கள் நிறுவப்படும்.

Self-Baggage Drop Kiosks-ன் பயன்கள் :

  • இந்த Self-baggage drop kiosks-கள்  முயற்சியானது, விமான நிலையத்துக்குள் சிரமமில்லாமல் நுழைவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், செக்-இன் செயல்முறையை சுதந்திரமாக கையாள  விமானப்பயணிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • இது Check-in கவுண்டர்களில் நெரிசலைக் குறைக்கும், ஏனெனில் பயணிகள் வரிசையைத் தவிர்த்து, தங்கள் சாமான்களை ந்த இடத்தில் இறக்கிவிடலாம்.
  • விமானத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் எங்கு வேண்டுமானாலும் செக்-இன் செய்யலாம், பெரிய வரிசையில் காத்திருந்த வேண்டியதில்லை. வழக்கமான செக்-இன் கவுண்டர்களைத் தவிர்த்து, காத்திருப்பு நேரத்தைக் குறைத்து நல்ல வசதியை பெறலாம்.

தற்போது இந்தியாவில்  அகமதாபாத், பெங்களூரு, காலிகட், சென்னை, டெல்லி, கோவா, குவாஹாத்தி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புனே, வாரணாசி மற்றும் விசாகப்பட்டினம்  ஆகிய 16 முக்கிய விமான நிலையங்களில் பயணிகளுக்காக Self-baggage drop kiosks-கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Self-baggage drop kiosks-மிகவும் பயனர் நட்பானது மற்றும் எளிதானது

விமான பயணிகள் தங்கள் PnR அல்லது டிக்கெட் எண் மற்றும் குடும்பப்பெயர் / விமான எண் ஆகியவற்றைக் enter  பண்ண வேண்டும். எல்லா விவரங்களும் வரும். பின்னர் இருக்கையைத் தேர்ந்தெடுத்து அச்சு போர்டிங் கார்டை அழுத்த வேண்டும். விமான நிலையத்தில் Self-baggage drop kiosks-ன் பயன்படுத்த, இந்த பின்வரும் பொதுவான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  1. விமான நிலையத்தில் சுய செக்-இன் கியோஸ்க்கைக் கண்டறிந்து முன்பதிவு குறிப்பு எண்ணை உள்ளிடவும் அல்லது டிக்கெட்டில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.
  2. இருக்கைகளைத் தேர்ந்தெடுக்க திரையில் உள்ள கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்.
  3. தேவைப்பட்டால் கூடுதல் சேவைகளைச் சேர்த்து பின் போர்டிங் பாஸை அச்சிட வேண்டும்.

விமான நிறுவனங்கள்  உள்நாட்டு விமானங்களுக்கு, திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 48 மணிநேரம் வரை பயணிகள் சுய செக்-இன் கியோஸ்க்கைப் பயன்படுத்த பொதுவாக அனுமதிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply