Akasa Air Commences International Operations : Akasa Air நிறுவனம் தனது international operations-ஐ தொடங்கியது

ஆகாசா ஏர் நிறுவனம் ஆனது தொடங்கப்பட்ட 19 மாதங்களில் சாதனை படைத்துள்ளது.  கத்தாருக்கான தனது செயல்பாடுகளைத் தொடங்குவதன் மூலம் ஏர் நிறுவனம் தொடங்கப்பட்ட 19 மாதங்களில் வெளிநாடுகளுக்கு பறந்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை ஆகாசா ஏர் நிறுவனம் பெற்றுள்ளது. ஆகாசா ஏர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே, “ஆகாசா ஏர் மார்ச் 28 முதல் தோஹாவிற்கு விமான சேவைகளுடன் தனது  சர்வதேச செயல்பாடுகளைத் (Akasa Air Commences International Operations ) தொடங்குகிறது. தோஹா  கத்தாரின் தலைநகர், வணிக மையம் மற்றும்  முக்கிய பொருளாதார இயந்திர நகரம் ஆகும்.  

ஒவ்வொரு வாரமும் மும்பையை தோஹாவுடன் இணைக்கும்  நான்கு  விமானங்களை ஆகாசா ஏர்  இயக்கும். இது கத்தார் மற்றும் இந்தியா இடையேயான  விமான இணைப்பை மேம்படுத்தும்.  இந்திய வர்த்தக மையமான மும்பையுடன் நேரடியாக இணைக்கப்படுவதால், இரு நாடுகளிலிருந்தும் பலதரப்பட்ட பயணிகளுக்கு வசதியாக, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை இந்த விமானங்கள்  வலுப்படுத்தும். இதன் மூலம் எங்கள் சர்வதேச செயல்பாடுகளை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நம்பகத்தன்மை, சேவைத் திறன் மற்றும் உலகளாவிய விமானப் போக்குவரத்தில் உயர்ந்த பாதுகாப்புத் தரங்களின் உறுதியான அடித்தளத்தின் மீது ஆகாசா ஏர் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த கத்தாருக்கான பயணம் ஆனது எங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியைக் குறிக்கிறது. உலகின் தலைசிறந்த 30 விமான நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கான எங்கள் பயணம் ஆனது தொடரும்.” என்று தெரிவித்துள்ளார். புதிய விமானப் பாதையானது கத்தாரில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் இந்தியர்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு பயண மாற்றை வழங்கியுள்ளது.

இப்போது இந்த ஆகாசா ஏர் விமானங்களுக்கான முன்பதிவுகள் ஆனது அகசா ஏரின் இணையதளமான ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆப்ஸ் மற்றும் பல முன்னணி OTA-கள் மூலம் திறக்கப்பட்டுள்ளன.  குறைந்த விமான கட்டணமாக திரும்பும் கட்டணம் ஆனது  INR 29, 012 இல் தொடங்குகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் மத்திய கிழக்கிலும் வேகமாக வளரும் நோக்கத்துடன் கத்தாருக்கான செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2022 இல்  தனது பறக்கும் பயணத்தை   தொடங்கிய ஆகாசா ஏர் விமான நிறுவனம், தற்போது 23 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்குகிறது.

Latest Slideshows

Leave a Reply