New Trains Between Sivagangai-Karaikudi-Thiruvarur : சிவகங்கை-காரைக்குடி-திருவாரூர் இடையே புதிய ரயில்கள் விரைவில் இயக்கம்

பல நாள் புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோரிக்கை நிறைவேறுகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை காரைக்குடி-திருவாரூர் (New Trains Between Sivagangai-Karaikudi-Thiruvarur) இடையே  3 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,

  • காரைக்குடி மயிலாடுதுறை இடையே தினசரி விரைவு ரயில்.
  • திருவாரூர்-காரைக்குடி இடையே பயணிகள் ரயில்.
  • செகந்திராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர விரைவு ரயில்

இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள், “இந்த 3 புதிய ரயில்கள் தொடங்கும் தேதி, நேரம் மற்றும் இயக்கம், குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஆனது விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளனர்.

தற்போது திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் எர்ணாகுளம், சென்னை, வேளாங்கண்ணி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான ரயில்கள் எல்லாம்  இயக்கப்பட்டு வருகிறது. காரைக்குடி திருவாரூர் வழிதடத்தில் 75 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில்கள் அனைத்தும் தற்போது 110 கிலோமீட்டர் வேகத்திற்கு வேகத்தை  அதிகப்படுத்த ரயில்வே வாரியம் ஆனது அனுமதி அளித்தது. திருவாரூர் காரைக்குடி இடையேயான 149.5 தொலைவு  வழித்தடம் ஆனது அகல ரயில் பாதையாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது.

அதனைத்  தொடர்ந்து ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தண்டவாளங்கள் மேம்படுத்தும் பணிகள் ஆனது முடிக்கப்பட்டு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி திருவாரூர் காரைக்குடி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் ஆனது நடத்தப்பட்டது. ரயில்களின் சோதனை ஓட்டம் ஆனது சுமார் 121 கிலோமீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதனை அடுத்து  தற்போது அந்த வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரித்து இயக்கப்பட்டு வருகிறது.

வரப்போகும் 3 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் :

பயணிகளும் பொதுமக்களும் இந்த வழித்தடத்தில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.  ரயில்வே வாரியம்  இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மூன்று புதிய ரயில்களை (New Trains Between Sivagangai-Karaikudi-Thiruvarur) இந்த வழித்தடத்தில் இயக்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி காரைக்குடி மயிலாடுதுறை இடையே தினசரி விரைவு ரயில், திருவாரூர்-காரைக்குடி இடையே பயணிகள் ரயில், மற்றும் செகந்திராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர விரைவு ரயில் என மூன்று புதிய ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்க அனுமதி அளித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply