Pawan Dauluri Appointed As CEO : மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸின் CEO-வாக பவன் டவுலூரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரூ 440,000 கோடி நிறுவனத்தின் CEO பொறுப்பை பெற்ற தமிழர் பவன் டவுலூரி பெரும் டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியர்ககளான கூகுளின் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாஃப்டின் சத்யா நாதெல்லா போன்றவர்களின் வரிசையில் தற்போது பவன் டவுலூரியும் சேர்ந்துள்ளார். மிகப் பெரிய நிறுவனத்தின் CEO பொறுப்புக்கு தமிழர் பவன் டவுலூரி (Pawan Dauluri Appointed As CEO) தேர்வாகியுள்ளார். AI துறையில் தனது வர்த்தகம், முதலீட்டை அதிகரிக்க உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் பல முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது.
மைக்ரோசாப்ட் நிர்வாகம் ஆனது விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்களை தனித்தனி தலைமையின் கீழ் நிர்வாகம் செய்து வந்தது. மைக்கேல் பரக்கின் தலைமையில் விண்டோஸ் பிரிவும் மற்றும் பவன் டவுலூரின் தலைமையில் சர்ஃபேஸ் பிரிவும் செயல்பட்டு வந்தது. தற்போது மைக்கேல் பரக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குள்ளேயே புதிய பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்கள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைக்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு தலைவராக பவன் டவுலூரி தலைவராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த முடிவு செயற்கை நுண்ணறிவு (AI) துறையில், அதன் சாதனங்கள் மற்றும் அனுபவங்களை உருவாக்க ஒரு முழுமையான அணுகுமுறையை எடுப்பதற்கு நிறுவனத்திற்கு உதவும். பவன் டவுலூரி இந்தக் குழுவை வழிநடத்தி என்னிடம் தொடர்ந்து தகவல்களை பகிர்வார். பவனுக்கு ஷில்பா ரங்கநாதன் மற்றும் ஜெஃப் ஜான்சன் மற்றும் அவர்களது குழுக்கள் நேரடியாக ரிப்போர்ட் செய்வார்கள் என்று மைக்ரோசாஃப்டின் அனுபவங்கள் மற்றும் சாதனங்களின் தலைவரான ராஜேஷ் ஜா கூறினார். மைக்ரோசாஃப்ட்-ன் புதிய AI குழுவின் CEOஆக Google DeepMind இணை நிறுவனர் மற்றும் முன்னாள் Inflection AI CEO Mustafa Suleyman இணைந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
பவன் டவுலூரி பற்றி ஓர் குறிப்பு (Pawan Dauluri Appointed As CEO)
சென்னை IIT-யில் பவன் டவுலூரி இளங்கலை பட்டம் பெற்றபிறகு, அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் 1999 இல் முதுகலை பட்டம் பெற்றார். பவன் டவுலூரி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி உள்ளார். மேலும் குவால்காம் மற்றும் ஏஎம்டியுடன் சர்ஃபேஸிற்கான செயலிகளை உருவாக்கும் பணியில் பவன் டவுலூரி ஈடுபட்டுள்ளார். தற்போது இந்த நிறுவனத்தின் மூத்த மற்றும் முன்னணி உயர் பதவியை பெற்றிருக்கிறார்.
Latest Slideshows
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்