NH 7 பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் சாலை Update
சென்னை – பெங்களூர் இடையே அமைக்கப்படும் 258 கிமீ Express Way NH 7 சாலை முழுவதையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க NHAI திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. சென்னை பெங்களூர் விரைவுச்சாலை திட்டம் ஆனது ரூ.18 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் ஒன்றாக இந்த Express Way NH 7 சாலை ஆனது தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா வழியாக உயர்தர சாலையாக அமைக்கப்படுகிறது.
இந்த சென்னை - பெங்களூர் Express Way NH 7 சாலை எவ்வளவு தூரம் கட்டப்பட்டு உள்ளது என்ற முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது :
- தமிழ்நாட்டில் உள்ள இந்த Express Way NH 7 சாலையின் 106 கி.மீ பிரிவில் 55% நிறைவு பெற்றுள்ளது.
- கர்நாடகாவில் உள்ள இந்த Express Way NH 7 சாலையின் 71 கிமீ பிரிவில் 87% நிறைவு பெற்றுள்ளது.
- ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்த Express Way NH 7 சாலையின் 85 கிமீ பிரிவில் 40% நிறைவு பெற்றுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 258 கிமீ 6 வழி எக்ஸ்பிரஸ் முழுவதையும் முடிக்க NHAI திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில் சென்னை – பெங்களூர் இடையே அமைக்கப்படும் Express Way NH-7 சாலையின் 60 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக முக்கியமான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆனது வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் சாலை பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டு வருவதால் விரைவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக பகுதிகளில் சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் ஜூலை மாதமே சாலையை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆந்திர பகுதியில் மட்டுமே பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் டிசம்பரில் சாலை திறக்கப்படும். இந்த Express Way NH-7 சாலை பயன்பாட்டுக்கு வந்த பின் பெங்களூர் – சென்னை இடையிலான பயணம் ஆனது 7 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் வேகமாக மற்றும் எளிதாக பயணம் செய்ய முடியும்.
Latest Slideshows
-
Nandini's T20 World Cup Sponsor - சர்வதேச அரங்கில் Nandini Brand-டை அறிமுகம் செய்ய நல்ல வாய்ப்பு
-
மே 21 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் Infinix GT 20 Pro
-
Aditya Captures Impact Of Solar Storm : சூரியப் புயலின் தரவுகளை படம் பிடித்த ஆதித்யா எல்-1
-
Purchase Deed Change At Just Rs 1000 : சொத்து வாங்குவோர் மற்றும் விற்போர் மகிழ்ச்சி
-
Rajinikanth Congratulated Vijayakanth : விஜயகாந்தை போல் இனி யாரையும் பார்க்க முடியாது
-
இந்தியாவின் முதல் திறந்த மூல பன்மொழி மாடல் Pragna-1B அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
-
Shashank Singh, சூர்யகுமார் யாதவ் போன்று வருவார் | ஆகாஷ் சோப்ரா கணிப்பு
-
Madras High Court Recruitment 2024 : சென்னை ஐ-கோர்ட்டில் வேலைவாய்ப்பு
-
Interesting Facts About Fish : மீன்களைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்
-
Bitter Gourd Benefits : பாகற்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்