Apple Awas Yojana - ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வீடு கட்டி தர உள்ளது

Apple Awas Yojana :

தனது தொழிற்சாலை ஊழியர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்குவதில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் ஆனது இத்திட்டத்திற்கு ஆப்பிள் அவாஸ் திட்டம் (Apple Awas Yojana) எனப் பெயர் சூட்டி அது டிரெண்டாகி உள்ளது. இந்த ஆப்பிள் அவாஸ் யோஜனா திட்டம் ஆனது சீனா மற்றும் வியட்நாமில் உள்ள இண்டஸ்ட்ரியல் ஹவுஸ்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த திட்டம் தனியார் துறையின் மிகப்பெரிய முன்முயற்சி ஆகும்.

இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பார்ட்னெர்ஷிப் மூலம் இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ளது. 10-15% ஆப்பிள் அவாஸ் யோஜனா திட்ட நிதி மத்திய அரசிடமிருந்து வரும், மீதமுள்ளவை மாநில அரசுகள் மற்றும் தொழில் முனைவோர்மிடமிருந்து வரும். இந்த Apple Awas Yojana திட்டத்தின் கீழ் சுமார் 78,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் தமிழகத்தில் மட்டும் 58,000 வீடுகள் கட்டப்பட உள்ளது. இத்திட்டத்தில்   தமிழகத்தில் கட்டப்பட போகும் வீடுகளின் எண்ணிக்கை ஆனது அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளது.

TATA Group, SPR India மற்றும் State Industries Corporation Of Tamilnadu (SIPCOT) ஆகியவற்றால் இந்த Apple Awas Yojana குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மார்ச் 31 ஆம் தேதி, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த Apple Awas Yojana குடியிருப்பு வீடுகள் திட்டத்தினை முடிக்கப்பெற்று தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தொழிலாளர்களின் செயல்திறனை மேம்படுத்துவதும் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதும் (குறிப்பாக 19-24 வயதுடைய புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு) இந்த வீட்டுத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். 

வாடகை, தங்குமிடங்களில் வசிக்கின்ற மற்றும் நீண்ட தூரம் வேலைக்குச் செல்ல வேண்டியுள்ள ஊழியர்களுக்கு இந்த முன்முயற்சியானது வீட்டுவசதி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. தொழிலாளர்கள் பொதுவாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வருவதால் தொழிற்சாலைகளுக்கு அருகில் தொழிலாளர்கள் வீடுகள் இருந்தால் அவர்களின் செயல்திறனை அதிகரிக்க முடியும். தங்கள் தொழிலாளர்கள் தங்குவதற்கான ஹவுசிங் காம்பிளெக்ஸ் கட்டித் தருவது பற்றி  தற்போது ஆப்பிளின் பார்ட்னர் நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், டாடா மற்றும் சால்காம்ப் நிறுவனங்களும் யோசித்து வருகின்றன.

Latest Slideshows

Leave a Reply