Lok Sabha Election 2024 : பதிவான வாக்கு சதவீதங்கள் குறைவு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நேற்று நடந்து முடிவடைந்த நிலையில், முதலில் அறிவிக்கப்பட்ட பதிவான வாக்கு சதவீதத்தை விட, பல தொகுதிகளில் பதிவான வாக்குகளின் ஓட்டு சதவீதம் குறைந்து (Lok Sabha Election 2024) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாயமான வாக்குகள் எங்கே சென்றது என்ற கேள்வி எழ தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்டமாக நேற்று நாடு முழுவதும் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன என்ற விவரம், தேர்தல் கமிஷனால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, தேர்தல் ஆணையம் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை விட பல மடங்கு வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது (Lok Sabha Election 2024) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மத்திய சென்னையில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 67.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், அதன் பிறகு இறுதியாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட மதிப்பீட்டின்படி 53.91 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்ட தட்ட 13.44 சதவீதம் வாக்கு சதவீதம் முதலில் சொன்னதைவிட குறைந்துள்ளது. அதேபோல் தென்சென்னையில் 7 மணி நிலவரப்படி 67.82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அதன் பிறகு 54.27 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் இன்னும் பல தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

Lok Sabha Election 2024 - வாக்கு சதவீதங்கள் குறைவு :

வடசென்னையில் 69.26 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 60.13 சதவீதமாக குறைந்துள்ளது. கோவையில் 71.17 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 64.81 சதவீதமாக குறைந்துள்ளது. தூத்துக்குடியில் 70.93 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 59.96 சதவீதமாக குறைந்துள்ளது. திருநெல்வேலியில் 70.46 சதவீதத்தில் இருந்து 64.10 சதவீதமாக வாக்குப்பதிவு குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 70.15 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 65.46 சதவீதமாக குறைந்துள்ளது. ஸ்ரீபெரும்பத்தூரில் 69.79 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 60.21 சதவீதமாக குறைந்துள்ளது. மதுரையில் 68.98 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 61.92 சதவீதமாக குறைந்துள்ளது. திருச்சியில் 71.20 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 67.45 சதவீதமாக குறைந்துள்ளது. தென்காசியில் 71.06 சதவீதத்தில் இருந்து 67.55 சதவீதமாக வாக்குப்பதிவு குறைந்துள்ளது. சிவகங்கையில் 71.05 சதவீதத்தில் இருந்து 63.94 சதவீதமாக வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

ராமநாதபுரத்தில் 71.05 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 68.18 சதவீதமாக குறைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் 72.99 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 71.55 சதவீதமாக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் 72.96 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 71.31 சதவீதமாக குறைந்துள்ளது. விருதுநகரில் 72.29 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 70.17 சதவீதமாக குறைந்துள்ளது. பொள்ளாச்சியில் 72.22 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 70.70 சதவீதமாக குறைந்துள்ளது. திருப்பூரில் 72.02 சதவீதத்தில் இருந்து 70.58 சதவீதமாக வாக்குப்பதிவு குறைந்துள்ளது. திருவள்ளூரில் 71.87 சதவீதத்தில் இருந்து 68.31 சதவீதமாக வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தேனியில் 71.74 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு 69.87 சதவீதமாக குறைந்துள்ளது. மயிலாடுதுறையில் 71.45 சதவீதத்தில் இருந்து 70.06 சதவீதமாக வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

Lok Sabha Election 2024 : தமிழகத்தில் நேற்று 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அது 69.46 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில், வாக்கு சதவீதத்தை கணக்கிடுவதில் தவறு நடந்துள்ளதா என்ற கேள்வியை பலரும் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக மறுபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றும், பதிவான வாக்குகளின் இறுதி சதவீதம் தெரியவரும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply