Mahila Samman Savings Scheme : பெண்களுக்கான பிரத்யேக சேமிப்பு திட்டம் Mahila Samman

Mahila Samman சேமிப்பு திட்டம் :

பெண்களுக்கான இந்த பிரத்யேக Mahila Samman Savings Scheme ஆனது FDஐ (Fixed Deposits) விட அதிக வட்டி தருகின்ற சிறந்த  சேமிப்பு திட்டம் ஆகும்.

பெண்களுக்கான இந்த Mahila Samman Savings Scheme பற்றி ஓர் குறிப்பு :

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2023-ம் ஆண்டின் பட்ஜெட்டின் போது பெண்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் அறிவித்த திட்டம் தான் இந்த Mahila Samman Savings Scheme ஆகும். இந்த Mahila Samman சேமிப்பு திட்டம் பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே நிதி ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த Mahila Samman சேமிப்பு திட்டத்தில் வங்கிகளின் FD-களில் கிடைக்கும் வட்டியை விட அதிக வட்டி ஆனது கிடைக்கும். அதாவது Mahila Samman சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி ஆனது வழங்கப்படும். மேலும் இந்தியாவின் சிறுமிகளுக்கான மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஆண் பாதுகாவலர்கள் உட்பட சட்டப்பூர்வ அல்லது இயற்கையான பாதுகாவலர்கள் இந்த Mahila Samman சேமிப்பு திட்டத்தில் கணக்கைத் திறக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு கணக்கை மட்டுமே இந்த Mahila Samman சேமிப்பு திட்டத்தில் திறக்க முடியும்.

வங்கிகளில் Mahila Samman சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை தொடங்கும் முறைகள் :

ஒரு வங்கி மூலமாகவோ அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்திலோ இந்த Mahila Samman சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை தொடங்க வேண்டும். இந்தத் திட்டத்தை SBI, BOB, Canara Bank மற்றும் Central Bank Of India ஆகியவை வழங்குகின்றன. மேலும் நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வங்கிகளின் விரிவான பட்டியல் ஆனது உள்ளது. பெண்கள் தங்களுக்கு வங்கிக்கணக்கு உள்ள வங்கிகளுக்கு சென்று Mahila Samman சேமிப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பெண்கள் முதலீடு செய்ய முடிவு செய்துள்ள தொகையுடன் தங்கள் பெயர், முகவரி மற்றும் PAN எண் உள்ளிட்ட தங்களின் தனிப்பட்ட தகவல்களை   வழங்க வேண்டும்.

தபால் அலுவலகத்தில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை தொடங்கும் முறைகள் :

  • இந்தியாவில் இருக்கின்ற எந்த தபால் நிலையத்திலும் பெண்கள் இந்த திட்டத்தை தொடங்கலாம்.
  • தபால் அலுவலகத்தில் பெண்கள் இந்த திட்டத்தை தொடங்கிய பிறகு, தங்கள் வைப்புத்தொகையைச் செயலாக்கிய பிறகு, அவர்களுக்கு Mahila Samman சேமிப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • இந்தச் சான்றிதழைப் பெண்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.
  • இந்தச் சான்றிதழ் ஆனது பெண்களின் முதலீட்டிற்குச் சான்றாக அமைகிறது.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை தொடங்க தேவையான ஆவணங்கள் :

  • பெண்கள் Mahila Samman விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்த பின்பு தங்கள் அடையாளத்தை பெயர், முகவரியை சரிபார்க்க சில ஆவணங்களை அளிக்க வேண்டும்.
  • இந்த KYC ஆவணங்கள் பொதுவாக வாடிக்கையாளரை அறிந்து கொள்ள குறிப்பிடப்படுகின்றன. அதாவது ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட KYC ஆவணங்கள் இதில் அடங்கும்.
  • பெண்களுக்கான இந்த Mahila Samman சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் பெண்கள் குறைந்தபட்சம் ரூ.1000 தொடங்கி ரூ.2,00,000 வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் ஆனது 2025-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி உடன் முடிவடைகிறது.

Latest Slideshows

Leave a Reply