Beedi Worker Daughter's Success : பீடி சுற்றும் தொழிலாளி மகளின் விடாமுயற்சியின் வெற்றி

Beedi Worker Daughter's Success - The Daughter Of A Beedi Worker From Tenkasi Has Passed The Civil Service Exam :

Upsc Civil Service Exam என்பது IAS, IPS, மற்றும் IFS உள்ளிட்ட நாட்டின் உயரிய பணியிடங்களுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒரு தேர்வாகும். ஆண்டுதோறும் நடத்தப்படும் Upsc Civil Service Exam-ஐ நாட்டில் லட்சக்கணக்கானோர் எழுதினாலும் சில நூறு பேர் மட்டுமே இந்த பணிகளுக்கு தேர்வாகிறார்கள். அந்த அளவுக்கு Upsc Civil Service தேர்வுகள் மிகவும் கடுமையானது. இந்த Upsc Civil Service தேர்வில் மொத்தம் 3 படிநிலைகளை கடந்த பின்பே வெற்றி பெற முடியும்.

2023 ஆம் ஆண்டுக்கான Upsc Civil Service Exam ஆனது முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்த Upsc Civil Service Exam-ன் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த 2023 ஆம் ஆண்டு 1016 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்ரீமதி இம்பா ஸ்டெல்லா சிவில் சர்வீஸ் பணிக்கான தேர்வில் (Beedi Worker Daughter’s Success) வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீமதி இம்பா ஸ்டெல்லா - ஓர் குறிப்பு :

ஸ்ரீமதி இம்பா ஸ்டெல்லா தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்னும் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் ஆவார். சீனிவாசன் மிகுந்த வறுமையான சூழ்நிலையிலும் தனது மகளை படிக்க வைத்துள்ளார். ஏழ்மையான சூழலில் தொடங்கி வசதியில்லாத வீட்டிலிருந்தே படித்த ஸ்ரீமதி இம்பா ஸ்டெல்லா தனது 3வது முயற்சியில் வெற்றி பெற்று தனது கனவை நனவாக்கியிருக்கிறார். கணினி படிப்பில் பட்டம் பெற்ற ஸ்ரீமதி இம்பா ஸ்டெல்லா தற்போது கோவை மண்டல PF அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

ஸ்ரீமதி இம்பா ஸ்டெல்லா தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசு பணிகளுக்கான Upsc Civil Service Exam-க்கு தயாராகி தற்போது தேர்வில் வெற்றி (Beedi Worker Daughter’s Success) பெற்று இருக்கிறார். தேசிய அளவில் இவர் 851வது இடத்தைப் பெற்றிருக்கும் இவர் பணி ஒதுக்கீடு பெற்றதும் பணியில் சேர இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள் ஆனது குவிந்த  வண்ணம் உள்ளது. சிவில் சர்வீஸ் வெற்றி தனக்கு மகிழ்ச்சிகரமானதாக இருப்பதாகவும்,  கடுமையாக முயற்சி செய்ததால் வெற்றி பெற முடிந்தது என்றும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வெறியோடு படித்தால் அனைவரும் எத்தகைய தேர்வாக இருந்தாலும் வெற்றி பெறலாம் எனவும் ஸ்ரீமதி இம்பா ஸ்டெல்லா கூறுகிறார்.

Latest Slideshows

Leave a Reply