Dheena Re release Collection : தீனா, பில்லா முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று தீனா மற்றும் பில்லா படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் (Dheena Re release Collection) தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தீனா மற்றும் பில்லா திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆனது. இந்த படங்கள் பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. காசி தியேட்டரில் எபினேஷ் எனும் அஜித் ரசிகர் கில்லி படத்தின் போஸ்டரை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்காக போலீசார் அவரை கைது செய்ததையடுத்து, அவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். மேலும், ரோகினி திரையரங்கில் அஜீத் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்தும், தகாத செயல்களில் ஈடுபட்டதும் பரபரப்பை கிளைப்பியது.

கில்லி ரீ ரிலீஸ் வசூல் :

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன முறையில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. கில்லி திரைப்படம் அப்போது வெளியான போதே 50 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது 2 வாரத்தில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Dheena Re release Collection :

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான தீனா திரைப்படம் நேற்று அஜீத் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார், நயன்தாரா, நமீதா, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள பில்லா படமும் நேற்று வெளியானது. 2 படங்களின் மொத்த முன்பதிவு 83 லட்ச ரூபாய் தான் இருந்ததாக தகவல் (Dheena Re release Collection) வெளியாகியுள்ளது. மேலும், இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் 1.5 கோடி கூட இல்லை என்றும் கூறப்படுகிறது. கில்லியின் ரீ-ரிலீஸ் வசூல் முதல் நாளிலேயே ரூ.4 கோடி வசூலை அள்ளிய அளவுக்கு 2 படங்களை பந்தயத்திற்கு விட்டும் கில்லி படத்தை நெருங்க முடியவில்லை. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு எல்லாம் கில்லி படம் வெளியாகவில்லை என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply