NH 7 பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் சாலை Update

சென்னை – பெங்களூர் இடையே அமைக்கப்படும் 258 கிமீ Express Way NH 7 சாலை முழுவதையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க NHAI திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. சென்னை பெங்களூர் விரைவுச்சாலை திட்டம் ஆனது ரூ.18 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் ஒன்றாக இந்த Express Way NH 7 சாலை ஆனது தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா வழியாக உயர்தர சாலையாக அமைக்கப்படுகிறது.

இந்த சென்னை - பெங்களூர் Express Way NH 7 சாலை எவ்வளவு தூரம் கட்டப்பட்டு உள்ளது என்ற முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது :

  • தமிழ்நாட்டில் உள்ள இந்த Express Way NH 7 சாலையின் 106 கி.மீ பிரிவில் 55% நிறைவு பெற்றுள்ளது. 
  • கர்நாடகாவில் உள்ள இந்த Express Way NH 7 சாலையின் 71 கிமீ பிரிவில் 87% நிறைவு பெற்றுள்ளது. 
  • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்த Express Way NH 7 சாலையின் 85 கிமீ பிரிவில் 40% நிறைவு பெற்றுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 258 கிமீ 6 வழி எக்ஸ்பிரஸ் முழுவதையும் முடிக்க NHAI திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில் சென்னை – பெங்களூர் இடையே அமைக்கப்படும் Express Way NH-7 சாலையின் 60 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக முக்கியமான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆனது வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் சாலை பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டு வருவதால் விரைவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக பகுதிகளில் சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் ஜூலை மாதமே சாலையை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆந்திர பகுதியில் மட்டுமே பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் டிசம்பரில் சாலை திறக்கப்படும். இந்த Express Way NH-7 சாலை பயன்பாட்டுக்கு வந்த பின் பெங்களூர் – சென்னை இடையிலான பயணம் ஆனது 7 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் வேகமாக மற்றும் எளிதாக பயணம் செய்ய முடியும்.

Latest Slideshows

Leave a Reply